• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 5 ஜூலை 2025

மன்னிப்பு ஒரு பயணம்

வெளியீட்டு தேதி 5 ஜூலை 2025

மன்னிப்புதான் எல்லாமே என்று சொல்லிவிட முடியாது என்ற செய்தியை ஒருமுறை நான் கேட்டேன். மன்னிப்பைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு இது மிகவும் உதவியாக இருந்தது, இன்று உங்களோடு அதைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் 😊.

எது மன்னிப்பு அல்ல?

  • என்ன நடந்தது என்பதை மறந்துவிடுவது மன்னிப்பு அல்ல - மன்னிப்பது என்பது உங்கள் மனதில் இருந்து ஒரு ஞாபகத்தை அழிக்க வேண்டும் அல்லது என்ன நடந்தது என்பதைப் பற்றிச் சிந்திக்க இடங்கொடுக்கக்கூடாது என்று அர்த்தமல்ல. காயம் ஆறுவதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும்; அதற்காக, மறக்க வேண்டும் என்று உங்களைக் கட்டாயப்படுத்துவது அந்த செயல்முறைக்கு உதவாது. இருப்பினும், நீங்கள் மன்னிக்கும் மனப்பான்மையில் நடக்கத் தேர்ந்தெடுக்கும்போது, காலப்போக்கில், ஞாபகத்திலிருந்து அது மறைந்து போகத்தொடங்குவதை நீங்கள் கவனிக்கலாம். 

"இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்." (சங்கீதம் 147:3

  • குற்றம் செய்தவர்களது நடத்தையை ஏற்றுக்கொள்வது மன்னிப்பு அல்ல - மன்னிப்பது என்பது குற்றத்தை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. செயல்கள் பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன, சில சமயங்களில் அந்த நபருக்கு மறுப்புத்தெரிவிப்பது, அல்லது பெற்றோர் அல்லது மேற்பார்வையாளர் போன்ற வேறொருவரிடம் விஷயத்தைச் சொல்வது என பதில் நடத்தைகள் அவசியம் தேவைப்படுகிறது.

"உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; ... அவன் செவிகொடாமற்போனால், இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ." (மத்தேயு 18:15-16

  • ஒப்புரவாகுதல் என்பது மன்னிப்பு அல்ல - மன்னிப்பு என்பது ஒப்புரவாகுதலுக்கான முதல் படியாக இருக்கலாம். இருப்பினும், உங்களைக் காயப்படுத்திய நபர் தன்னை மாற்றிக்கொள்ளும் எண்ணத்தை வெளிப்படுத்தாமல், தொடர்ந்து உங்களுக்குத் தீங்கு விளைவித்தால், நீங்கள் அப்படிப்பட்ட நபர்களிடமிருந்து சற்று  விலகியிருப்பது நல்லது.

“ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்” (நீதிமொழிகள் 14:16)

  • இது எளிதல்ல - அன்பரே, மன்னிக்கத் தீர்மானிப்பதால் நீங்கள்தான் உண்மையான ஒரு நட்சத்திரம்! இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பது எனக்குத் தெரியும், ஆனால் இந்தப் பயணத்தில் என்னோடு கூட சேர்ந்து பயணிப்பதில், உங்களை நினைத்து நான் மிகவும் பெருமிதமடைகிறேன்!

இந்த வார்த்தைகள் முன்பை விட இன்று உண்மையாகவே பேசுகிறது:     நீங்கள் ஒரு அதிசயம்!

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.