• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • ID Bahasa
    • IT Italian
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
வெளியீட்டு தேதி 1 செப்டெம்பர் 2023

அன்பரே, உன்னுடன் நடப்பவர் யார்?

வெளியீட்டு தேதி 1 செப்டெம்பர் 2023

நிச்சயமாகவே, கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்க்கையானது, சமாதானம், மகிழ்ச்சி மற்றும் வெற்றி ஆகியவை நிறைந்ததாக இருந்தாலும், அது இவைகளை மட்டுமே உள்ளடக்கியதல்ல. இந்த வாழ்க்கையில் யுத்தங்கள், போராட்டங்கள், சோதனைகள், மற்றும் தாக்குதல்கள் போன்றவையும் உள்ளன.

இருப்பினும், நீ தேவனுடைய பிள்ளையாக இருப்பதால், பகலோ இரவோ, எந்த வேளையாக இருந்தாலும் இயேசு உன் அருகில் நிற்கிறார் என்ற நிச்சயம் உனக்கு‌ இருக்கிறது.

"நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்."  (வேதாகமத்தில் லேவியராகமம் 26:12ஐப் பார்க்கவும்) 

மிகப்பெரிய பாதுகாவலர், பரிந்துரைப்பதில் வல்லவர், யுத்த வீரர்களுக்கெல்லாம் வீரர் உன்னுடன் சேர்ந்து நடந்துகொண்டிருக்கிறார்!

இயேசு உன்னோடு இருப்பதால்...

  • புயலின் மத்தியில் உன் இருதயம் இயற்கைக்கு அப்பாற்பட்ட மகிழ்ச்சியால் நிரம்பி வழிகிறது.
  • பெரும் கொந்தளிப்பின் மத்தியிலும் உன் ஆத்துமா சமாதானத்தோடு இருக்கிறது.
  • துன்பம் எனும் காற்றால் உன் வாழ்க்கை அசைக்கப்படுவதில்லை.

அன்பரே, தேவனுடைய வழிகளில் தொடர்ந்து நட, தொடர்ந்து முன்னேறு,  விடாமுயற்சியுடன் செயல்படு. அவர் உண்மையுள்ளவர், அவர்தாமே உன்னுடன் நடந்துகொண்டிருக்கிறார்!

Eric Célérier
எழுத்தாளர்