• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 31 ஜூலை 2024

அன்பரே, உன்னதங்களிலிருந்து ஆண்டவர் உனக்கு செவிசாய்க்கிறார்...

வெளியீட்டு தேதி 31 ஜூலை 2024

உன் இருதயத்தை துக்கம் மூழ்கடிக்கும்போது நீ என்ன செய்வாய்?  தீவிரவாதத் தாக்குதல்கள் நாடு முழுவதும் பயத்தை விதைக்க முயலும்போது நீ என்ன செய்வாய்? அல்லது உன்னைச் சுற்றியுள்ள அனைத்தும் இருளாகவும் திகிலூட்டுவதாகவும் தோன்றும்போது நீ என்ன செய்வாய்?

சில சூழ்நிலைகள் உனக்கு முற்றிலும் அப்பாற்பட்டதாகத் தோன்றலாம். அத்தருணத்தில் பயங்கள் மற்றும் கேள்விகளால் குழப்பமடைந்ததாக நீ  உணர்கிறாயா…

ஒரே ஒரு விஷயம் செய்யவேண்டி இருக்கிறது, அது ஒரு மிகப்பெரிய விஷயம் அல்ல! இப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஆண்டவருடைய நாமத்தை சொல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவரைக் கூப்பிடு, அவரைத் தேடு, அவரை நோக்கிக் கதறு. நம்பிக்கையற்றதாகத் தோன்றும் இக்கட்டான சூழ்நிலைகளின் மத்தியில் ஆண்டவர் காணாதவர்போல் இருப்பதில்லை.  நாம் நினைப்பதற்கும் மேலாக அவர் செயல்புரிபவர்! அவருடைய செவிகள் அவருடைய மக்களின் கூக்குரலைக் கேட்கவும் அவர்களுக்கு ஆதரவாக இடைபடவும் திறந்திருக்கும்.

வேதாகமத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது: “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.”  (2 நாளாகமம் 7:14)

ஆம், அன்பரே, ஆண்டவர் தம் செவியை உன் பக்கம் திருப்பி, உனக்குச் செவிகொடுத்து, உன்னில் இடைபடுகிறார்! நீதிமான் கர்த்தரால் கைவிடப்படுவதில்லை. அவருடைய வல்லமை பொருந்தின கரத்தின் கீழ் உன்னைத் தாழ்த்தி ஒப்புக்கொடு. உன் இயலாமையை  ஒப்புக்கொள்... அவருடைய சர்வவல்லமையை அறிக்கையிடு! யாராவது இடைபட்டு உனக்கு உதவினால், அது நிச்சயமாக ஆண்டவரது உதவியே தான்!

உன்னதத்திலிருந்து உன்னுடைய பேச்சைக் கேட்கவும், உன்னை மன்னிக்கவும், உன்னைக் குணப்படுத்தவும் ஆண்டவர் விரும்புகிறார்... உன்  அன்புக்குரியவர்கள், உன் நிலம் என‌ யாவற்றையும் அவர் பாதுகாக்கிறார். இம்மாதிரியான  கடினமான காலங்கள் வரும்போது, ​​ஆண்டவரைத் தேடு. இன்று, அவர் சந்நிதி முன் வந்து, தாழ்மையுடன் அவரிடத்துக்குத் திரும்பு. அவர் உன் மீது மிகுந்த கவனம் செலுத்தி உனக்குச் செவிசாய்ப்பார்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நன்றி எரிக்! இந்தக் கடினமான காலங்களில் நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த நீங்கள் உதவுகிறீர்கள். இயேசுவின் அன்பை என்னுடன் தினமும் பகிர்ந்துகொள்வதற்கு நன்றி.  இது உண்மையிலேயே எனக்கு ஊக்கமளிக்கிறது.... ஒருபோதும் இதை நிறுத்திவிட வேண்டாம்! இதைச் செய்வதை விட்டுவிடவும் வேண்டாம்!”  (ஆலன்)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.