• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 30 ஜூன் 2024

உன்னால் பேச முடியவில்லை என்றால், பிரகாசி! ✨✨

வெளியீட்டு தேதி 30 ஜூன் 2024

ஒரு கிறிஸ்தவளாக தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய சிரமம் அல்லது விரக்தி என்ன என்று சொல்லி, நான் விசாரித்து அனுப்பிய கருத்துக்கணிப்பில் ஒரு வாசகர் இப்படி எழுதியிருந்தார்: “நான் ஒரு மதச்சார்பற்ற பணி இடத்தில் வேலை செய்கிறேன், அங்கு நான் என் கிறிஸ்தவ நம்பிக்கையைப் பற்றி வெளிப்படையாகப் பேச முடியாது. பல சுவிசேஷ சக ஊழியர்களுடன் இதைப் பற்றிப் பேசுவதற்கு எனக்கு அரிதான சந்தர்ப்பங்கள் மட்டுமே உள்ளன... அதனால் நான் ஒரு கஷ்டத்தைச் சந்திக்கும்போது,​ நான் மிகவும் தனிமையாக உணர்கிறேன். திருச்சபை நண்பர்கள் சிலர், எனது பணியிடம் கர்த்தருடைய பிரசன்னத்தை உணருகிற ஒரு ஆவிக்குரிய இடமாக இருக்கும் என்பதாகப் புரிந்துகொள்கிறார்கள்."

ஆண்டவருடைய சுபாவத்தை, அவருடைய அன்பை, அவருடைய இரக்கத்தை நாம் வெளிப்படுத்த வேண்டும் என்று சொல்லி வேதாகமம் நம்மை ஊக்குவிக்கிறது... இன்று, நம்முடைய பணியிடங்களில், அப்படிச் செய்ய நமக்குச் சுதந்திரம் இல்லாதபோது, எப்படி இப்படிப்பட்ட அற்புதமான ஆண்டவரைப் பற்றி சாட்சி கூற முடியும்?

மத்தேயு 5:16 நமக்குச் சொல்கிறது: "இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது." 

தேவ வார்த்தை தெளிவாக சொல்லப்பட்டுள்ளது: நமது ஒளி பிரகாசிக்க வேண்டும்! பிரகாசம் என்றால் பேசுவதா? பேசத் தேவையில்லை! நாம் செய்யும் “நற்கிரியைகளையே” இவ்வார்த்தை குறிப்பிடுகிறது.

அன்பரே, உன்னால் வெளிப்படையாகப் பேச முடியாதபோது, ஆண்டவரை வெளிப்படையாக வெளிப்படுத்திக் காட்டு. உன் வாயின் வார்த்தைகள் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! அவதூறு பேசவோ அல்லது கெட்ட வார்த்தைகளைப் பேசவோ மறுக்கட்டும்.

அன்பாக இரு! அது வித்தியாசமானது! அது புத்துணர்ச்சி தரக்கூடியதும், ஜீவனைத் தரவல்லதுமாகும்!

உனது சக பணியாளர்கள் இயேசுவைப் பற்றி அவர்களிடம் பேச அனுமதிக்க மாட்டார்கள், ஆனால் கிறிஸ்துவை அவர்களது இருளான இதயத்திற்குள் கொண்டு செல்வதை அவர்களால் தடுக்க முடியுமா? அவருடைய அன்பை வெளிக்காட்டுவதிலிருந்து உன்னைத் தடுக்க முடியுமா?  எச்சூழலிலும் உன் முகத்தில் நிலவும் புன்னகையைத் தடுக்க முடியுமா? நிச்சயமாக முடியாது! அவர்களை நேசிப்பதிலிருந்தும், அவர்களை ஆசீர்வதிப்பதிலிருந்தும், இரகசியமான இடத்தில் அவர்களுக்காக நீ ஜெபிப்பதிலிருந்தும், பரிந்து பேசுவதிலிருந்தும் எதுவும் உன்னைத் தடுக்க முடியாது!

ஆண்டவர் உண்மையுள்ளவர் என்று நான் நம்புகிறேன், அவர் உன் நடத்தையின் மூலம் உன் சக பணியாளர்கள் மற்றும் முதலாளிகளின் இதயங்களைத் தொடவும் அவர்கள் வாழ்வில் செயல்படவும் முடியும். எனவே, ஆண்டவருக்குச் சித்தமானால், அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் துவண்டுபோகாத உனது சமாதானம் மற்றும் மகிழ்ச்சிக்கான "ரகசியத்தை" உன்னிடம் கேட்பார்கள் மற்றும் இயேசுவை சந்திக்க நாடுவார்கள்... நான்  ஜெபிக்கிறேன்!

ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக, அன்பரே!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.