வெளியீட்டு தேதி 15 நவம்பர் 2023

அன்பரே, உன் இருதயத்திலிருந்து வெளிவருவது எது?

வெளியீட்டு தேதி 15 நவம்பர் 2023

ஒவ்வொரு பருவமும் தன்தன் பருவத்திற்கேற்ப கனிகளைப் பங்களிக்கிறது, அப்படித்தானே? உன்னைப் பொருத்தவரை, உன் வாழ்க்கையின் தற்போதைய பருவத்தில் நீ என்ன கனிகளைத் தந்துகொண்டிருக்கிறாய்?

அடிக்கடி இந்தக் கேள்வியை உனக்கு நீயே கேட்டுக்கொள்வது நல்லது. இது மருத்துவ சோதனை செய்து, எந்த உறுப்பு நன்றாக செயல்படுகிறது, எது நன்றாக செயல்படவில்லை என்பதை வெளிப்படுத்துவது போன்றதொரு கேள்வியாகும். அன்பரே, இப்போது உன் இருதயத்திலிருந்து எப்படிப்பட்ட விஷயங்கள் வெளிவருகின்றன?

அவைகள் ஜீவனால் நிறைந்த, போஷாக்கு அளிக்கும் கனிகளாக இருக்கின்றனவா?

அல்லது சில சமயங்களில், உன்னையும் அறியாமல், கசப்பு, கோபம் அல்லது பொய்கள் போன்றவை உன் வாயிலிருந்தோ அல்லது எண்ணங்களிலிருந்தோ வெளிவருகின்றனவா?

இந்த விஷயத்தில், பயப்பட வேண்டாம்! ஆண்டவருடைய வார்த்தையைத் தியானிப்பதன் மூலம், ஆண்டவர் மீதான உன் விசுவாசத்தைத் தட்டி எழுப்பி, அத்தியாவசியமானவற்றோடு நீ மீண்டும் இணைந்துகொண்டால் மட்டும் போதும்.

வேதாகமத்தை வாசிப்பது, வசனங்களை மனதில் வைத்து, "சிந்தித்துப் பார்த்தல்", "ஏற்றுக்கொள்ளுதல்", வேத வாக்கியங்களைத் தியானம் செய்தல் போன்றவை உன் எண்ணங்களை முற்றிலும் மாற்றுகிறதாய் இருக்கிறது. வேர் நன்றாக இருந்தால் மட்டுமே, அதன் கனியும் நன்றாக இருக்கும்!  (வேதாகமத்தில் மத்தேயு 12:33ஐ பார்க்கவும்.)

இதற்குக் கால‌ அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால் அது உண்மையிலேயே மிகுந்த பலனுள்ளது!

Eric Célérier
எழுத்தாளர்