• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 29 ஆகஸ்ட் 2024

அன்பரே, உன் இருதயத்தை "அழகுபடுத்துவது" எது?

வெளியீட்டு தேதி 29 ஆகஸ்ட் 2024

இளம் வயதில் நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கான பள்ளிக்குப்  போனேன். நான் ஒரு விஷயத்தை உனக்குச் சொல்கிறேன்... நான் சமையலை எவ்வளவு விரும்புகிறேனோ, அதைவிட அதிகமாக மற்றவர்களுடன் இணைந்து சாப்பிட விரும்புகிறேன்! :-) ஆண்டவர் நமக்குக் கொடுத்த வாழ்க்கையின் இன்பங்களில் இதுவும் ஒன்று என்று நான் நம்புகிறேன். குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சிகரமானது.

அந்த நேரத்தில், நல்ல மசாலா சாந்துக்களின் முக்கியத்துவத்தை நான் கற்றுக்கொண்டேன். உண்மையைச் சொல்லப்போனால், மாற்று மசாலாவை தயாரித்து பயன்படுத்தினால், அது ஒரு நல்ல, இறைச்சியை அல்லது மீனை ருசியற்ற உணவாக மாற்றிவிடும்.

நம் இருதயமும் ஏறக்குறைய இப்படித்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன். நல்லவற்றையோ அல்லது கெட்ட விஷயங்களையோ நாம் "இடையில் செருகிவிடலாம்"! இந்த சுவையூட்டும் இடத்திலிருந்து நம் வாழ்க்கையும் ஒரு குறிப்பிட்ட சுவையை அளிக்கிறது.

நிச்சயமாகவே, ஆண்டவருடைய வார்த்தை, இயேசு தரும் மகிழ்ச்சி, சமாதானம் போன்ற பல்வேறு விஷயங்கள் உனக்குள் உணவாக ஊட்டப்பட முடியும். இவைகள் நல்ல பொக்கிஷங்கள்! இருப்பினும், சில சமயங்களில் பயம், சந்தேகம் அல்லது அச்சம் ஆகியவை நம்மை பாதிப்புக்குள்ளாக்கும்படி நாம் இடமளிக்கிறோம். இவை மோசமான விஷயங்கள். இவற்றை மோசமான "மசாலாப் பொருட்களுடன்" ஒப்பிடலாம் அவைகளுக்கு நாம் இடமளித்தால், அது நம் வாழ்வில் கசப்பான சுவையை வெளிப்படுத்திவிடும்.

அன்பரே, இன்று, உன் நிலையும் இப்படித்தான் இருக்கிறது என்றால், இந்த வேத வசனங்களை அறிக்கையிட்டு தியானிப்பதன் மூலம் இந்தப் பயமுறுத்தும் எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உனக்கு உதவ விரும்புகிறேன்:

  • “கர்த்தர் என் பெலனும், என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்."  (சங்கீதம் 28:7
  • “ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா).”  (சங்கீதம் 46:2-3
  • “நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததும் இல்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள்; என்னைத்தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன்." (ஏசாயா 44:8)  
  • "இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது."  (சங்கீதம் 91:5-7

பயத்திலிருந்தும் அதன் அனைத்து வேதனைகளிலிருந்தும் நீ விடுவிக்கப்பட இயேசு விலைக்கிரயம் செலுத்தியிருக்கிறார்! பயம் உன்னிலிருந்து விலகி நீ விசுவாசிக்கவும் அவரில் ஜெயம் பெறவும் வழி உண்டாகும்படி, ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தையை வாசிப்பாயாக!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நான் எனது வேதாகமத்தை வாசித்து, மூன்று காலை தியானங்களுடன் எனது நாளைத் தொடங்குகிறேன். ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ எனக்கும் என் மனைவிக்கும் ஒவ்வொரு நாள் காலையிலும் புதிய  உற்சாகமான காரியங்களைக் கலந்துரையாடவும் கற்றுக்கொள்ளவும் உதவுகிறது. உங்களுக்கும் உங்களது  நேர்மறையான வார்த்தையை எங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும் உங்களது ஊழியத்துக்கும் நன்றி தெரிவித்து நாங்கள் ஆண்டவரிடம் ஜெபிக்கிறோம். நன்றி." (ஜெரோம், தருமபுரி)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.