வெளியீட்டு தேதி 1 பிப்ரவரி 2023

உன் இலக்கை நோக்கித் தொடர்ந்து முன்னேறு

வெளியீட்டு தேதி 1 பிப்ரவரி 2023

உன் இலக்கை அடைவதற்கான சிறந்த வழி, நேராகப் பார்ப்பதும், முன்னோக்கிப் பார்ப்பதும்தான் என்பது உனக்குத் தெரியுமா? அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு கூறினார்:

"சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை. ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்."  (வேதாகமத்தில் பிலிப்பியர் 3:13-14 ஐ வாசியுங்கள்) 

அநேகக் கிறிஸ்தவர்கள் பல காரணங்களால் தங்களது இலக்கிற்குள் பிரவேசிப்பதை கடினமாகக் காண்கிறார்கள்:

  • அவர்கள் கடந்த காலத்து விஷயங்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களது கண்கள் பின்புறத்தைக் காட்டும் கண்ணாடியையும், காயம் மற்றும் கசப்பையும் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும்.
  • அவர்கள் மேல் சொல்லப்பட்ட குறைபாடுகளையோ அல்லது பலவீனங்கள் மற்றும் போதுமானதாக இல்லை என்று அவர்கள் நினைக்கும் திறன்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதால் அவர்கள் முன்னேற முடியாதவர்களாய் காணப்படுகிறார்கள்.
  • அவர்கள் தோல்வியடைந்து விடுவோமா என்று பயப்படுகிறார்கள். மேலும் இது, அவர்களை புதுமைகளைக் கண்டுபிடிப்பதையோ அல்லது உருவாக்குவதையோ நாடுவதை விட்டுவிட்டு, நேற்றையதினம் செய்த அதே விஷயங்களைச் செய்யத் தூண்டுகிறது.

நீயும் இப்படித்தான் இருக்கிறாயா, அன்பரே? அப்படியானால், ஒரு காரியத்தை நான் உனக்கு நினைவூட்ட விரும்புகிறேன்: நீ அவருடைய ஆவியைப் பெற்றிருக்கிறாய், பலமும் தைரியமும் உள்ள ஆவியைப் பெற்றிருக்கிறாய். பயமும் அதைரியமும் அளிக்கும் ஆவி அல்ல! உன் புரிந்துகொள்ளுதலைவிட மேலான ஒரு ராஜ்யத்தின் சுதந்தரவாளியாகவும் உன்னை உணர்ச்சியுடன் நேசிக்கும் ஒரு ராஜாவின் பிள்ளையாகவும் நீ இருக்கிறாய்!

ஆகவே, முழுவதுமாக தன்னுடைய சம்பத்தைப் பற்றிப் பேசுகிறவனும், தன்னுடைய இலக்குக்குள் பிரவேசிக்கிறவரனுமான ஒரு ஜெயங்கொள்பவரின் மனநிலையைக்கொண்டிருக்க வேண்டும் என்று நான் உன்னை உற்சாகப்படுத்துகிறேன்:

  • இனி ஒருபோதும் திரும்பிப் பார்க்காதே.
  • இலக்கை நோக்கி நேராக முன்னேறிச் செல்; இயேசு உனக்கான பாதையை ஏற்கனவே திறந்துவிட்டார்!
  •  உன் இலக்கை நிறைவேற்ற நீ பரிபூரணப்படும்வரை காத்திருக்க வேண்டாம்.

இப்போதே என்னுடன் சேர்ந்து ஜெபிக்க நான் உன்னை அழைக்கிறேன்… “சர்வவல்லமையுள்ள தேவனே, நான் உம்மை என் அருகில் வைத்துக்கொண்டு இலக்கை நோக்கி நேராக முன்னோக்கிச் செல்ல விரும்புகிறேன். நான் உம்மை விசுவாசிக்கிறேன்... உமது திட்டங்கள் மிகவும் சரியானவை என்பதையும், என் எஞ்சிய நாட்களில் பின்பற்ற வேண்டிய பாதையை நீர் எனக்குக் கற்றுக் கொடுப்பீர் என்பதையும் நான் அறிவேன். நீ விரும்பும் நபராக நான் மாறுவதற்கு தேவையான எல்லாவற்றையும் எனக்குத் தரும் உமது பரிசுத்த ஆவிக்காக நன்றி. இயேசுவின் நாமத்தில், ஆமென்."

Eric Célérier
எழுத்தாளர்