உன் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்...
ஒப்புரவாகுதலின் பாதையில் தொடர்ந்து செல்லும் வேளையில், நீ சந்திக்கும் முரண்பாடுகள் பற்றிய உன் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்லி, நான் உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன்.
கஷ்டங்களைப் பற்றி வேதாகமம் நமக்கு என்ன சொல்கிறது என்பதை இங்கே காணலாம்:
“அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது." (ரோமர் 5:3-5)
நீ கஷ்டப்படுவதையோ அல்லது துன்பப்படுவதையோ உன் பிதாவின் இருதயம் பார்க்க விரும்புவதில்லை. ஆனால் விஷயங்கள் கடினமாக இருக்கும்போது, அவற்றிலிருந்து நீ வெளியே வந்து அவருடைய இருதயத்திற்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். அன்பரே, ஆண்டவருடைய அன்பு உன் இருதயத்தில் ஊற்றப்பட்டுள்ளது. எனவே நீ பொறுமையுடன் காத்திரு.
அதுமட்டுமின்றி, நேசிக்க முடியாதவர்களை நேசிப்பது ஆண்டவரில் மென்மேலும் வளர உனக்கு உதவுகிறது. அன்பரே, நீ நம்புவதற்கு ஏதுவான சாதகமான சூழ்நிலை உனக்கு இல்லையென்றாலும், சகலத்தையும் செய்து முடிக்கும் ஒரே மெய்யான தேவனின் உறவில் அது நிலைத்திருக்கிறது!
இன்று, உன்னைப் பலப்படுத்தக்கூடிய ஆண்டவர் மீது உன் கண்களை நிலைநிறுத்திக்கொள்! நீ தனியாக இல்லை, நீ என்றென்றும் ஜீவித்திருக்கிற ஆண்டவருடைய பிள்ளை! நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து முன்னேறு.
இன்றே ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்!
