• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 26 ஆகஸ்ட் 2023

உன் கனவு விசித்திரமானதாக இருந்தால் பரவாயில்லை, அன்பரே

வெளியீட்டு தேதி 26 ஆகஸ்ட் 2023

உலகத்தின் பார்வையில் முற்றிலும் முட்டாள்தனமாகத் தோன்றும் ஒரு கனவை ஆண்டவர் உனக்குள் எழும்ப செய்திருக்கிறாரா?  அது உனக்கு எட்டாத தூரத்தில் உள்ள கனவாக இருக்கிறதா? என்னுடைய அறிவுரை இதுதான்… அவரை நம்பு, பயப்படாதே!

பழைய ஏற்பாட்டில், தேவன் நோவா என்ற மனுஷனிடம் பேசி, ஒரு பேழையை, அதாவது, மிகப்பிரம்மாண்டமான ஒரு படகைக் கட்டச் சொன்னார், மேலும் ஒவ்வொரு வகையான விலங்குகளிலும் ஒரு ஜோடியைப் பிரித்து, அவற்றை ஜோடி ஜோடியாக அந்தப் பேழைக்குள் அனுப்பச் சொன்னார். இதற்கெல்லாம் அவர் கொடுத்த காரணம்? பல வாரங்களுக்கு வெள்ளம் பூமியைத் தாக்கப் போகிறது என்பது மட்டும்தான்...

இந்த ஆர்வத்தைத் தூண்டும் கோரிக்கைக்கு நோவாவின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை வேதத்தில் வாசித்துப்பார்… "நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்." (வேதாகமத்தில் ஆதியாகமம் 6:22ஐப் பார்க்கவும்) நோவா தெய்வீக ஆணையை நிறைவேற்றினார்! ஒருவேளை அவரிடம் ஐயங்கள் இருந்திருக்கலாம்... வேதாகமத்தில் அதைப் பற்றிக் குறிப்பிடவில்லை.  ஆனால் அவர் கர்த்தருடைய சித்தத்திற்கு ஏற்ப நடந்துகொண்டார் என்பதே உண்மை.

மனுஷீக சிந்தனைப்படி பார்த்தால், இங்கே நோவாவிடம் ஆண்டவர் வைத்த கோரிக்கை அர்த்தமுள்ளதாக தோன்றவில்லை. ஆனால் நம் ஆண்டவர் நிகழ்காலத்திற்கு மட்டுமே ஆண்டவர் அல்ல... நித்தியத்திற்கும் அவர்தான் ஆண்டவர்! அவருடைய தொலைநோக்கும் விஷயங்களைக் காணும் விதமும் காலத்தினால் முடக்க முடியாதது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, Jesus.net இணையதளத்தை உருவாக்க கர்த்தர் என்னை ஏவினபோது, ​​அது அந்த நேரத்தில் பொதுவான ஒன்றாகவோ  அல்லது சாதாரணமான ஒன்றாகவோ இருந்த ஒரு காரியம் அல்ல... ஆனால் இன்றோ அது, “அனுதினமும் ஒரு அதிசயம்” என்பதைப்போலவே ஆசீர்வாதத்தின் வல்லமைவாய்ந்த கருவியாக மாறிவிட்டது!

அன்பரே, பயம் உன்னை மேற்கொள்ள அனுமதிக்காதே... ஜெபித்து ஒரு அடி முன்னெடுத்து வை! தேவன் உனக்குள் வைத்திருக்கும் இந்தக் கனவானது, ஒருவேளை அநேகர் இரட்சிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் "பேழை" போன்றதாக இருக்கக் கூடும். ஆத்துமாக்களை மீட்பதற்கு நாளைய தினத்தில் தேவன் பயன்படுத்தும் வழிமுறையாக இருக்கலாம்! இனி சந்தேகப்பட வேண்டாம்... கர்த்தருடைய கரத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டு, உன் கனவை நனவாக்கும்படி தொடர்ந்து முயற்சி செய்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: "முதலாவது, நீங்கள் இன்றைய தினம் அனுப்பிய செய்தி என்னோடு நேரடியாகப் பேசியது. நான் என் தொழிலை விட்டுவிடும்படி வற்புறுத்தப்பட்டேன், நாங்கள் தோல்வியடைந்துவிடுவோமோ என்று பயந்தோம். ஆனாலும் எங்கள் தொழிலில் எங்களது குறிக்கோளை அடைய முடியும் என்று நான் நம்பினேன். 3 வருட அர்ப்பணிப்பு, போராட்டங்கள் மற்றும் மனச்சோர்வு போன்றவைகளுக்குப்பின்பு, கடந்த சில மாதங்களில் கர்த்தர் செய்த நன்மையான காரியங்களுக்காக நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன். உங்களுடைய தினசரி செய்திகளானது, நான் தடுமாற்றத்தில் இருந்த நேரத்தில், எங்கள் கனவை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையையும் விசுவாசத்தையும் மீண்டும் பெற எனக்கு உதவியது. இப்போது அது மீண்டும் தழைத்து எழும்புவதைப்போல் தெரிகிறது. உங்களுக்காகவும் நீங்கள் பகிர்ந்தளிக்கிற உற்சாகத்திற்காகவும் நான் கர்த்தருக்கு நன்றி தெரிவிக்கிறேன்!!!"  (கரோலின்)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.