வெளியீட்டு தேதி 10 ஏப்ரல் 2023

உன் சுய அறிவினால் ஏமாற வேண்டாம் அன்பரே!

வெளியீட்டு தேதி 10 ஏப்ரல் 2023

பெரும்பாலும் சுய அறிவு என்பது,  நம் வாழ்க்கையின் கடந்த கால அனுபவங்கள், சந்தித்த துன்பமான நிகழ்வுகள் அல்லது தற்போதைய சூழ்நிலை, இவைகளிலிருந்து நாம் கற்றுக்கொண்ட அனுபவ அறிவாக இருக்கிறது.

சில நேரங்களில், நமக்குள் இருக்கும் இந்த சுய அறிவு  நாம் உண்மை என்று நம்பி இருப்பவற்றையும் மாறுதலாய் பார்க்க வைக்கிறது. நாம் இயேசுவை எப்படி பார்க்கிறோம் சிந்திக்கிறோம் என்பதையும் இந்த ‘சுய அறிவானது’ சிதைக்க முடியும்.

வாருங்கள், நாம் இந்த வேத வசனத்தை ஒன்றாக வாசிப்போம், யோவான் 20: 15 : "இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்."

இயேசு உயிர்த்தெழுந்த உடனே  நடந்த ஒரு சம்பவம் இது. உயிர்த்தெழுந்த ஆண்டவரின் அருகில் தான் இருக்கிறாள் என்பதை அறியாமல், அவருடைய இறந்த உடலை தேடிக்கொண்டிருந்தாள். ஆண்டவர் உயிரோடு இருந்தும், அவளுக்கு மட்டும் அவர் இறந்தவர் ஆனார்.

அவள், இயேசுவை இறந்துபோனவர்களின் மத்தியில் தேடிக் கொண்டிருப்பதை பார்க்கையில், இயேசு உயிர்த்தெழுந்து வருவார் என்பதை அவள் சிறிதளவும் எதிர்பார்க்கவில்லை என்பது விளங்குகிறது. ஆகையால், இந்த தோட்டத்தில் இருப்பவன் தோட்டகாரன் தான். வேறு யாராக இருக்க முடியும்? (அவளுடைய பார்வையில்).

இதை வேறு விதமாக சொன்னால், அவள் சுய அறிவின் மூலம் சிந்தித்து இயேசுவை தேடிக்கொண்டிருந்தாள். 

ஆண்டவர், அவருடைய எல்லா செயல்களிலும் வழிகளிலும் ஒப்பற்றவர். இன்று அவர் ஒரு விதத்திலும், நாளை மற்றொரு வழியிலும் தன்னை வெளிப்படுத்துவார். சில நேரங்களில் நாம் திகைப்படையும்படி, நம் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாரோ அல்லது நமது விருப்பத்தின்படியோ  அவர் செய்வதில்லை…. ஆனாலும், ஈஸ்டரை அடுத்த இந்த திங்களில், எப்பொழுதும் போல, அவர் இங்கே இருக்கிறார், உயிரோடு இருக்கிறார், உங்களுக்கு மிகவும் அருகில் இருக்கிறார்.

Eric Célérier
எழுத்தாளர்