அன்பரே, உன் சரியான அணுகுமுறையால், பரலோகத்தையே பூமிக்குக் கொண்டுவர முடியும்!
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் மரணமும் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது என்று கூறுகிறது. இது உண்மை தான்! நம் நடத்தையானது நம் வாழ்விலும், நம் சக மனிதா்களின் வாழ்விலும் ஜீவனையும் மரணத்தையும் கொண்டுவர வல்லமையுள்ளதாயிருக்கிறது என நானும் நம்புகிறேன்.
ஒரு மனிதன் நினைத்தால், ஒரு பார்வையால் காயப்படுத்திவிட முடியும், வார்த்தைகளால் கொன்று விட முடியும், மௌனத்தினால் குழியில் இறக்கி புதைத்து விட முடியும். அதே சமயத்தில், ஒரு மனிதன் நினைத்தால் மேற்கூறிய அனைத்திற்கும் நேர்மாறாக நடந்துகொள்ளவும் முடியும் என்பதும் உண்மையே!
நீ, இந்த அகில உலகத்தையும் படைத்த சர்வவல்லமையுள்ள தேவனுக்குச் சொந்தமானவன் / சொந்தமானவள்!
நீ பணத்தினால் அல்ல, இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் விலை கொடுத்து வாங்கப்பட்ட நபர். (பரிசுத்த வேதாகமம், 1 பேதுரு 1:18-19)
இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டு அவரின் சீஷராக மாறிய நீ, இயேசுவைப்போல, உன் ஒரு பார்வையால் கீழே தள்ளப்பட்டவர்களைத் தூக்கிவிட முடியும் என்பதை அறிந்துகொள்!
உன் ஒரு வார்த்தையால் உனக்கு அருகில் இருப்பவரின் முகத்தில் உன்னால் புன்னகையைக் கொண்டுவர முடியும். ஒரு வாக்குவாதத்தின்போதோ, அல்லது ஒருவர் புறங்கூறும்போதோ நீ அமைதியாய் இருப்பதால் மோசமான சூழ்நிலை உருவாவதை உன்னால் தடுக்க முடியும்.
இந்த உன்னத பொறுப்பை இயேசு உன்னை நம்பி கொடுத்திருக்கிறார். இயேசுவைப்போல நேசிக்கவும், மன்னிக்கவும், அவரைப் போலவே வாழ்ந்து காட்டவும் நீ இந்த உலகத்தில் பிறந்திருக்கிறாய். ஆனால் உன் சுய பெலத்தால் அப்படிச் செய்ய முடியாது. நீ இயேசுவைப்போல வாழ பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே உனக்கு உதவி செய்ய முடியும்! (பரிசுத்த வேதாகமம், சகரியா 4:6)
பரலோகத்தை பூமிக்குக் கொண்டு வா, போராட்டத்தின் மத்தியிலும் அன்பாயிரு, வாக்குவாதத்தில் ஈடுபடாமல் மன்னித்துப் பழகு. இது சுலபமான காரியம் அல்ல என்றாலும், நீ போகும் இடமெல்லாம் பரலோக ராஜ்யத்தின் கொள்கைக்கான ஸ்தானாதிபதியாக இரு!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நான் எதைப் பற்றி சிந்திக்கிறேன் என்பதையும், என்ன தியானிக்க வேண்டும் மற்றும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பற்றி பலவித அடையாளங்களினால் வேத வாக்கியங்களின் மூலம் தேவன் வெளிப்படுத்தி வருகிறார், என் சிந்தையில் உணர்த்தி வருகின்றார். கடந்த 3 நாட்களாக 3 முறை, "உன்னை நேசிப்பதுபோல பிறரையும் நேசி" என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு என்னோடு பேசினார். ஆலயத்திலும், வேதாகம செயலி மூலமாகவும் 'அனுதினமும் ஒரு அதிசயம்' என்ற உங்கள் பதிவுகள் மூலமாகவும் தேவன் என்னோடு பேசினார். உங்களின் பதிவுகள் நான் பிறருக்காக வாழும்படியாய் என்னை ஊக்குவிக்கிறது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.” (ஜெசி).
