• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 20 அக்டோபர் 2024

உன் சோர்வுக்கு மருந்து உண்டு.

வெளியீட்டு தேதி 20 அக்டோபர் 2024

இன்றுமுதல், "இளைப்பாறுதலைக் காணுதல்" என்ற தொடரை நாம் தியானிக்கத் தொடங்குகிறோம். நீ இயேசுவிடம் வந்தால், இளைப்பாறலாம் என்று அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். இந்தச் செய்திகளின் குறிக்கோள் என்னவென்றால், சரீரப்பிரகாரமாகவோ, மனதளவிலோ, அல்லது உணர்வுப்பூர்வமாகவோ சோர்வாக இருக்கும் வாசகர்களுக்கு உண்மையான இளைப்பாறுதலைக் கண்டறிய உதவுவதாகும்.

இயேசு சொன்ன இந்த வசனம் அவருடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளது: "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” (மத்தேயு 11:28-29

உன் சோர்வைப் போக்க ஒரு மருந்து உள்ளது, அன்பரே, இந்தப் பரிகாரம் ஒருபோதும் சோர்வடையாதவரிடமிருந்து வருகிறது.

மத்தேயு 11ம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகள், நீ இருக்கிற வண்ணமே என்னிடம் வா என்ற அழைப்பாகும். அவர் ஆண்டவருக்கு அருகில் இளைப்பாற ஒரு அழைப்பை கொடுக்கிறார்.

ஆண்டவரைப் பற்றி வேதாகமம் நமக்கு என்ன சொல்கிறது: “பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது. சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்." (ஏசாயா 40:28-29

ஆம், அவர் சர்வவல்லமையுள்ளவர், நித்தியமானவர், எல்லையற்றவர், அளவிட முடியாதவர். இன்று உனக்குத் தேவையான அனைத்தையும் நீ அவரில் காணலாம். அவரிடம் தீர்வு இல்லை என்ற கவலை உனக்கு ஒருபோதும் வேண்டாம். உன் சோர்வை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, அதற்கு ஈடாக, அவரது நன்மை, அவரது பொறுமை, அவரது பலம், அவரது படைப்பாற்றல் மற்றும் அவரது வல்லமை ஆகியவற்றை அவரிடமிருந்து எடுத்துக்கொள்.

இன்று, நான் உன்னை ஒரு காரியத்தைச் செய்ய அழைக்கிறேன்: உடல்ரீதியாக, மனரீதியாக அல்லது உணர்ச்சி ரீதியாக உன்னை சோர்வடையச் செய்யும் அனைத்தையும் எழுது. அதன் பிறகு, இச்சோர்வுகளை எதிர்கொள்ள ஆண்டவர்  உனக்கு அளிக்கும் அனைத்தையும் எழுது! இன்று, உனது பலத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொள், அவர் உனக்காகத் தயார் செய்துள்ள அபரிவிதமான ஆசீர்வாதங்களை அவர் உனக்குள் ஊற்றட்டும்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “இந்த மின்னஞ்சலை அனுப்பியதற்கு நன்றி. எனது உடல்நலப் பிரச்சனைகளை நினைத்து நான் கவலைப்படுவதால், இது என்னை மிகவும் தொட்டது. கர்த்தர் என்னை நேசிப்பதால் நான் செய்ய வேண்டியதெல்லாம், என் சோர்வை அவரிடத்தில் கொடுத்துவிட வேண்டியதுதான். நான் ஆண்டவரிடம் ஜெபம் செய்தேன், இப்போது நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். எல்லாவற்றையும் நான் அவருக்குத் தெரிவித்துவிட்டபடியால், நான் இனி கவலைப்படப் போவதில்லை. நான் அவரது சமூகத்திலும் சமாதானத்திலும் இளைப்பாறப்போகிறேன்.  ஆண்டவர் உங்களையும் இந்த இணையதளத்தையும் ஆசீர்வதிக்கட்டும்." (சார்லின்)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.