• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 29 பிப்ரவரி 2024

அன்பரே உன் சிறிய விதை மிகப்பெரியதாக வளர முடியும்!

வெளியீட்டு தேதி 29 பிப்ரவரி 2024

நீ எப்போதாவது ஆண்டவரிடம் உனக்கு மிகப்பெரியதாகத் தோன்றும் ஒன்றைக் கேட்டு ஜெபித்து, அந்த நேரத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதையும் பெற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கிறாயா?

“பெரிய அளவில் கேட்டு நாம் செய்யும் ஜெபங்களுக்கு ஆண்டவர் விதை அளவில் பதிலளிக்கிறார். இன்னும் சொல்லப்போனால், நாம் கேட்ட மிகப்பெரிய கருவாலி மரத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, அந்த மரத்தை வளர்ப்பதற்கான விதையை அவர் நமக்குக் கொடுக்கிறார். இது விதையுடன் சேர்ந்து நம்மையும் வளரச் செய்கிறது.”  - பில் ஜான்சன்

இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால், சிறிய ஆரம்பத்தை அற்பமாக எண்ண வேண்டாம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஒரு தனி நபரால் வண்டிகளைப் பழுதுபார்க்கும் அவனது/அவளது வேலை ஸ்தலத்திலிருந்து தொடங்கியது! அமேசான், கூகுள், ஆப்பிள், டிஸ்னி... இவையனைத்தும் வண்டிகளைப் பழுதுபார்க்கும் (car shed) வேலை ஸ்தலத்திலிருந்து ஆரம்பித்தவை என்பாதை கற்பனை செய்து பார்.

ஆண்டவர் உனக்குக் கொடுத்திருக்கிற "சிறிய விதைக்கு" பொறுமையாக தண்ணீர் ஊற்றி விடாமுயற்சியுடன் உழைக்க நான் உன்னை ஊக்குவிக்கிறேன்.

நீ பெற்றுக்கொண்ட சிறிய காரியத்தில் விடாமுயற்சியுடன் செயல்பட்டால், அது வளரச்சியடைவதைக் காண்பாய். வளர்ச்சிக்கான இந்த காலகட்டம் உனக்கு உறுதியான வேரைத் தரும். வெற்றியை நீ அடையும்போது, அதை நிர்வகிக்கத் தேவையான குணாதிசயத்தின் வலிமை உனக்குள் இருக்கும்!

வேதாகமம் சொல்கிறது, “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, அன்பரே, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது.” (யாக்கோபு 1:4

இது எளிதானது அல்ல, ஆனால் நம் ஆண்டவர் இப்படித்தான் விசுவாசிகளான ஸ்திரீகளையும் புருஷர்களையும் வடிவமைக்கிறார்.

அன்பரே, இன்று நீ யாரும் பார்க்காத ஒரு மறைவான இடத்தில் எல்லோராலும் மறக்கப்பட்டுவிட்டதாக உணர்கிறாயா? கவலைப்படாதே... காத்திரு, ஜெபி, சிறிய விஷயங்களில் உண்மையாக இரு. ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தத்தின் பரந்துவிரிந்த ஸ்தலத்தை நீ காண்பாய்!

Eric Célérier
எழுத்தாளர்