வெளியீட்டு தேதி 31 அக்டோபர் 2024

உன் சூழ்நிலை கட்டுக்கடங்காமல் சென்றுவிடும்போது நீ என்ன செய்வாய்?

வெளியீட்டு தேதி 31 அக்டோபர் 2024

சரிசெய்ய முடியாத ஒரு சூழ்நிலையில் நீ இருப்பதாக உணர்ந்தால் நீ என்ன செய்வாய்? ஒருவேளை, என்னைப் போலவே, நீயும் ஆண்டவரிடம் கூக்குரலிட்டு கதறுவாயோ?

ஒரு சிக்கலான சூழ்நிலை நம் தலைக்கு மேல் சென்றுவிடும்போது, ​​அவற்றிலிருந்து மீண்டுவர புதிய வழியைத் திறக்க ஆண்டவரின் வல்லமை  தேவை. அந்த அடிமைத்தனத்திலிருந்தும், அந்த மோசமான நடத்தையிலிருந்தும் மற்றும்  எதிர்மறையான தாக்கத்திலிருந்தும் நம்மை விடுவிக்கும்படி  ஆண்டவர்  தலையிடுகிறார்.

இதைத்தான் நாம் வேத வசனத்தில் வாசிக்கிறோம்: "இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்." (சங்கீதம் 34:6)

நாம் மோசமான சூழ்நிலையிலிருந்து  விடுதலை அடைந்துவிட்டால், அந்த விடுதலையில் தொடர்ந்து நடக்கவும், நமது முந்தைய சூழ்நிலையின் அடிமைத்தனத்திற்குத் திரும்பாமல் இருக்கவும் ஆண்டவரின் ஞானம் நமக்குத் தேவைப்படுகிறது.

அதனால்தான் கிறிஸ்துவே எல்லாவற்றிற்கும் ஒரே  தீர்வு என்று ஆண்டவருடைய வார்த்தை நமக்குச் சொல்கிறது: அவரே நம்மை விடுவிக்கும் ஆண்டவருடைய வல்லமையும் நமக்கு தினசரி தேவைப்படும் ஞானமுமாய் இருக்கிறார் (1 கொரிந்தியர் 1:24). 

"...கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்." 

இயேசுவில், உன் சூழ்நிலைக்குத் தேவையான வல்லமையைக் கண்டடைவாயாக. அன்பரே, அவருக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ உனக்குத் தேவையான ஞானத்தைப் பெற்றுக்கொள்!

Eric Célérier
எழுத்தாளர்