வெளியீட்டு தேதி 8 அக்டோபர் 2024

உன் தேவையின் நேரத்தில் ஆண்டவர் தம்மை வெளிப்படுத்துகிறார்.

வெளியீட்டு தேதி 8 அக்டோபர் 2024

வேதாகமம் சொல்கிறது: “நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்."  (பிலிப்பியர் 4:6-7

உனக்கு என்ன வேண்டும்?

உனக்கு ஒரு தேவை ஏற்படும்போதுதான், உன் நண்பனின் அன்பை உன்னால் அறிய முடியும். அதுபோல, உன்னுடைய தேவை எதுவாக இருந்தாலும்சரி, ஆண்டவர் உனது நண்பராக அடிக்கடி தம்மை உனக்கு வெளிப்படுத்துகிறார். அவர் உண்மையுள்ளவரும், கனிவான இதயமுள்ள சிநேகிதருமாய் இருக்கிறார்!

ஆண்டவர் உன் தேவைகளை எவ்வாறு வழங்குகிறார் என்று வேதாகமம் இங்கே கூறுகிறது: நிறைவாகவும், தம்முடைய ஐசுவரியத்தின்படியும், கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலும் அவர் உன் தேவைகளை சந்திக்கிறார்.

"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்." (பிலிப்பியர் 4:19)

உன் தேவைகளில் எதுவும் ஆண்டவருக்குத் தெரியாமல் இருப்பதில்லை. "உனக்கு என்ன வேண்டும்?" என்ற கேள்வியை நான் மீண்டும் உன்னிடம் கேட்டால், இந்த முறை உன் பதில் வித்தியாசமாக இருக்குமா? உன் உணர்ச்சிபூர்வமான கோரிக்கைகளை மட்டுமல்ல, ஆவிக்குரிய தேவைகளையும், சரீரப்பிரகாரமான தேவைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு நீண்ட பட்டியலை எழுதுவாய் அல்லவா?

இப்போது உன் உள்ளத்திலிருந்து இந்தப் பட்டியலை நீ எழுதும்போது, இவைகளை நீ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன்…

  • ஆண்டவர் உன்னைப் பார்க்கிறார், அவர் உன்னை அறிந்திருக்கிறார், எல்லா சூழ்நிலைகளிலும் அவர் உன்னை நேசிக்கிறார்.
  • தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உன் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறார்.
  • நீ அவருடைய குமாரனை மகிமைப்படுத்தும் விதத்தில் ஆண்டவர் உனக்கு எல்லாவற்றையும் வழங்குகிறார்.
  • இயேசு கிறிஸ்துவின் மூலம் அனைத்தையும் வழங்கினார்.

அன்பரே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரும்படி உன்னை அழைக்கிறேன்! (எபிரெயர் 4:16) இப்போதும் கூட, உன் தேவைகளையும் கோரிக்கைகளையும் நீ ஆண்டவருக்கு தெரியப்படுத்துவாயாக!

Eric Célérier
எழுத்தாளர்