வெளியீட்டு தேதி 14 அக்டோபர் 2024

அன்பரே, உன் தவறு உன்னை முன் நிறுத்தினால் நீ என்ன செய்வாய்?

வெளியீட்டு தேதி 14 அக்டோபர் 2024

நீ தவறு செய்யும்போது எப்படி நடந்துகொள்வாய்? உதாரணமாக…

  • தவறான நபருக்கு மின்னஞ்சல் அனுப்பிய பிறகு நீ எப்படி உணர்வாய்?
  • உன் கோபத்தை உன் குழந்தைகள் மீது காட்டிய பின்பு எப்படி உணர்வாய்?
  • முக்கியமாக கட்ட வேண்டிய கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்த மறந்துவிட்டால் என்ன செய்வாய்?
  • யாரையாவது சரியாக அங்கீகரிக்க மறந்துவிட்டால் உன் மனநிலை எப்படி இருக்கும்?

பெரும்பாலான நேரங்களில், நம் தவறுகளை நாம் சரியான விதத்தில் திருத்திக்கொள்ள முயல்வதில்லை. அதற்குப் பதிலாக, குற்ற உணர்ச்சியில் சிக்கிக்கொள்கிறோம். ஆனால் நாம் அதைப் பற்றி உண்மையிலேயே சிந்தித்தால், நம் தவறுகள் திருத்தத்தைக்கொண்டுவரும் அளவிற்கு விலையேறப்பெற்றவை என்பது நமக்குப் புரியும்: அவை நம் காரியங்களைத் திருத்தி, சிறப்பாகச் செய்ய நமக்குக் கற்பிக்கின்றன. ஒரு நபர் இவ்வாறு சொன்னார், "தவறுகள் செய்கிறோம் என்றால்,  வேகமாகக் கற்றுக்கொள்கிறோம் என்றுதான் அர்த்தம்."

அன்பரே, இன்று, உன் தவறுகள் எதற்கு நேராக உன்னை நடத்துகிறது என்று சிந்தித்துப்பார்: ஒரு படி மேலே செல்வதற்கும், இன்னும் விரைவாகக் கற்றுக்கொள்வதற்கும், காரியங்களைச் சிறப்பாகச் செய்வதற்கும் அது ஒரு ஆரம்ப படியாக இருக்கும். அந்தத் தவறுக்கான அடுத்த படி, உன் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கும் கத்தியாகவோ அல்லது உன்னை நிரந்தரமாகக் குற்றப்படுத்தும் ஆக்கினைத்தீர்ப்பாகவோ இருக்காது.

“ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை” என்று வேதாகமம் சொல்கிறது. (ரோமர் 8:1)  

அன்பரே, இனியும் உன்னை எதுவும் ஆக்கினைக்குட்படுத்துவதில்லை அல்லது குற்றம் சாட்டுவதில்லை. உன் தவறுகளும் உன்னை ஆக்கினைக்குட்படுத்துவதற்கோ அல்லது குற்ற உணர்வை ஏற்படுத்துவதற்கோ அல்ல. மாறாக, நீ விரைவாகக் கற்றுக்கொள்ள அவைகள் உனக்கு உதவுகின்றன.

எனவே, உன் தலையை உயர்த்தி, ஆக்கினைத்தீர்ப்பை அல்ல, அதற்குப் பதிலாக கிருபையையும் மன்னிப்பையும் பெற்றுக்கொள்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “எரிக் அவர்களுக்கும் இந்த ஊழியத்தைச் செய்யும் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். என் நன்றியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. என் வாழ்க்கையில் எதுவும் சரியாக நடக்கவில்லை. பிறகு, நான் இந்த ஊழியத்தைச் சந்தித்தேன். இது ஒரு அதிசயம். இயேசு கிறிஸ்துவே என் அடைக்கலம் என்ற நம்பிக்கை எனக்குக் கிடைத்தது. என்னுள் பாவங்கள் இருந்தாலும், அவருக்குள் நான் பாதுகாப்பாகவும் அன்பாகவும் இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருப்பதற்கு நன்றி.”  (ஹெப்சிபா)

Eric Célérier
எழுத்தாளர்