வெளியீட்டு தேதி 26 டிசம்பர் 2023

அன்பரே, உன் பரமபிதா உன்னை மிகவும் பலமுள்ள நபராய் உருவாக்குகிறார்!

வெளியீட்டு தேதி 26 டிசம்பர் 2023

இன்று காலை நீ எப்படிப்பட்ட சிந்தையுடன் எழுந்திருந்தாய்? மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் மற்றும் மனநிறைவுடனும் எழுந்திருந்தாயா?  அப்படியானால், மிகவும் நல்லது!  இல்லையென்றால், உன்னை ஊக்கப்படுத்துவதற்காகவே உனக்கு இதை எழுதுகிறேன்…

நீ நினைக்கிறபடி அனைத்தும் எதிர்மறையாக நடக்கும் என்று நம்பாதே. மாறாக கர்த்தர் சொல்வதை நம்பு…

“ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும் (பலப்படுத்தினவரும்), இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்…” (கொலோசெயர் 1:12-13)  

அவர் நம்மை முற்றிலும் பலப்படுத்துகிறார்! மற்ற மொழிபெயர்ப்புகள் "தகுதிப்படுத்துகிறார்" அல்லது "உதவி செய்கிறார்" என்று கூறுகின்றன.

இன்று, ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத நபராக, மிகவும் பலவீனமான நபராக நீ இருப்பதுபோல் உணர்ந்தாலும், அவர் உன்னை வேறுவிதமாகக் காண்கிறார்:

  • உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு நீ நன்மை செய்யும் அளவுக்கு பிதாவானவர் உன்னைப் பலப்படுத்துகிறார்.
  • உனக்கு முன் நிற்கும் இந்த மலையில் நீ ஏறும் அளவிற்கு பரமபிதாவானவர் உன்னைப் பலப்படுத்துகிறார்.
  • அன்பு செலுத்தக் கடினமாக இருக்கும் இந்த நபரை, நீ நேசிக்கும் அளவுக்கு பரமபிதா உன்னைப் பலப்படுத்துகிறார்.
  • பரமபிதா உன்னை நேசிப்பதுபோல் உன்னை நீயே நேசிக்கும் அளவுக்கு அவர் உன்னைப் பலப்படுத்துகிறார்.

உன் பரமபிதா உன்னை முற்றிலும் பலப்படுத்துகிறார்! இன்று முடியாதது என்று எதுவுமில்லை, ஏனென்றால், அவர் சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார், திறமையற்றவர்களைத் திறமையானவர்களாகவும், பலவீனமானவர்களை பலமுள்ளவர்களாகவும் மாற்றுகிறார். இன்று இதுவே அவருடைய வார்த்தை, இதுவே அவருடைய அற்புதம்!

இந்த உன்னதமான ஆராதனைப் பாடலான "நன்றி உள்ளம் நிறைவுடன் நன்றி பரிசுத்தற்கே" என்ற பாடலைக் கேட்கும்போது நீ பலப்படுத்தப்படுவாயாக.   

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நான் ஆவிக்குரிய போராட்டத்தைச் சந்தித்துக்கொண்டிருந்தேன், என்னால் மீண்டுவர முடியாது என்று நான் நினைத்தேன், பரிசுத்த ஆவியானவருடைய உதவியால் நான் நினைத்ததை விட அதிக பலத்துடன் அதிலிருந்து வெளியே வந்தேன். தினமும் காலையில் நான் வாசிக்கும் இந்தச் செய்திகளானது எனக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாய் இருக்கிறது. ஒரு முறை, ஒரு செய்தியானது எனக்கென்றே எழுதப்பட்டிருந்ததை என் உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்தேன்; என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. என்னுடன் பேசுகின்ற தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்." (நான்சி)

Eric Célérier
எழுத்தாளர்