அன்பரே, உன் முழு இருதயத்தோடும் ஆண்டவரை நம்பு!
நீதிமொழிகள் 3:5-6-ல் வேதாகமம் சொல்கிறது, “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்."
நீ நம்பு... நீ ஆண்டவரை நம்பலாம், அன்பரே. அவர் உன்னை நேசிக்கிறார், உனக்குச் செவிகொடுக்கிறார். அவர் உன் கண்ணீரின் சத்தத்தைக் கூட கேட்கிறார் என்று வேதாகமம் கூறுகிறது (வேதாகமத்தில் சங்கீதம் 6:8). அவர் உன் நண்பராய் இருக்கிறார், நீ இப்போதே உன் இருதயத்தைத் திறந்து பேச ஆரம்பிக்கலாம்!
கர்த்தருக்குள்... அவர் ஒருவரே நித்தியமாக வியாபித்திருப்பவர். அவர் சர்வவல்லமையுள்ள தேவன்! "கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்." (வேதாகமம், எரேமியா 17:7)
உன் முழு மனதுடன்... நம் முழு மனதோடு ஆண்டவரைத் தேடினால், அவரை நாம் கண்டடைவோம். நாம் அவரைக் கண்டுபிடிப்போம். உன் இருதயத்தை அவருக்கு நேராகத் திருப்பு, அன்பரே. அவரைத் தேடுவதில் உன் முழு இருதயத்தையும் செலுத்து!
உன் சுய புத்தியின் மேல் சாயாதே... உன் திறமை, உன் புரிதல் மற்றும் உன் செயல்திறன்களுக்கும் அதிகமான தீர்வுகள் ஆண்டவரிடம் இருக்கிறது. உன்னுடையதை விட அவருடைய திறமைகளை சார்ந்துகொள்வது எப்போதுமே சிறந்தது!
உன் எல்லா வழிகளிலும் அவரை அங்கீகரிப்பாயாக... இதன் அர்த்தம் ஆண்டவரை எல்லாவற்றிற்கும் மேலான இடத்தில் வைப்பதாகும். அவருக்கு உன் கதவை அடைத்துவிடாதே - உனது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் கூட அவரைச் சேர்த்துக் கொள்!
மேலும் அவர் உன்னைத் தமது பாதைகளில் வழிநடத்துவார்... ஏசாயா 40:4-ல் வேதம் சொல்வது போல், மலைகளைத் தாழ்த்தவோ அல்லது பள்ளத்தாக்குகளை உயர்த்தவோ தேவனால் மட்டுமே முடியும். அவர் உனக்காக இதைச் செய்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன் மற்றும் அறிக்கையிடுகிறேன், அன்பரே, ஏனென்றால், நீ முழு மனதுடன் அவரை நம்புகிறாய்!
