• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 21 ஜூன் 2024

உன் விசுவாசத்தை ஆண்டவர் மீது வை!

வெளியீட்டு தேதி 21 ஜூன் 2024

நீ ஆண்டவர் மீது விசுவாசம் வைக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் வற்புறுத்த முடியாது. அவருடைய ஊழியர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் மீது நம்பிக்கை வை, ஆனால் சர்வவல்லமையுள்ள ஆண்டவரை விசுவாசி, மனிதனை அல்ல.

விசுவாசித்தவர்களை இரட்சகர் ஒருபோதும் வெறுமையாக அனுப்பிவிடவில்லை, மேலும் அவர் மக்கள் மீது அல்லது அவர்களின் இனம் / தோற்றம் ஆகியவற்றைக்கொண்டு எந்தவித வேறுபாடும் காட்டவில்லை ... அவர் மக்களிடம் விசுவாசத்தைத் தேடினார். அவர் விசுவாசத்தைக் கண்டதும், நோயாளிகளைக் குணப்படுத்தினார். அதைக் குறிப்பிடும் வகையில், அவருடைய விருப்பமான வாசகங்களில் ஒன்று இவ்வாறு சொல்கிறது: "நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது." (மத்தேயு 8:13)

ஒரு நாள், ஜனக் கூட்டம் நிறைந்த ஒரு வீட்டில் இயேசு உபதேசித்துக் கொண்டிருந்தபோது, கூரையின் மேற்பரப்பில் ஒரு ஆரவார சத்தத்தைக் கேட்டார். திமிர்வாதக்காரன் ஒருவனைக் கூரையின் வழியாக வீட்டிற்குள் இறக்குவதற்காக மனுஷர்கள் ஓடுகளை அகற்றிக் கொண்டிருந்தனர்... ஆகவே, திறக்கப்பட்ட கூரையைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, போதகர் ஒரு கட்டில் கீழே இறங்குவதைக் கண்டார், பின்னர் அவர் இன்னொரு விஷயத்தையும் கண்டார்; அது அவர் எப்போதும் ஒரு கிரியையை செய்வதற்கு முன்பாக மனிதர்களிடம் தேடும் ஒரு காரியமாக  இருந்தது! (லூக்கா 5:20

அன்பரே, இன்று, கர்த்தர் உனது விசுவாசத்தைப் பார்க்கிறார். இது உனக்கு மிகவும் சிறியதாகத் தோன்றலாம், ஆனால் மிகப்பெரிய விசுவாசம் தேவை என்று இயேசு ஒருபோதும் சொல்லவில்லை. ஒரு கடுகு விதை அளவு விசுவாசம் ஒரு மலையை நகர்த்துவதற்குப் போதுமானதாக இருக்கிறது.

உனக்கு விசுவாசம் இருக்கிறது என்பதை நான் அறிவேன், இந்த விசுவாசமே போதும்; இயேசு இப்போது உன்னைப் பார்த்து, “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்று சொல்ல அது போதும், அன்பரே...!”

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் என் இதயத்தைத் தொட்டது மற்றும் என் பிதாவின் மிகப்பெரிய அன்பை உணர வைத்தது. பாஸ்டர் எரிக், கர்த்தருடைய வார்த்தையை ஒருவருடைய இருதயத்திற்குள் கொண்டுவரும் விதத்தில், கர்த்தரிடமிருந்து பெற்று, எங்களுக்கு எழுதும்படியான வரத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். நான் நீண்டநாளாக நோய்வாய்ப்பட்டிருக்கிறேன். இந்த ஊழியம் என்னை ஊக்குவிக்கிறது. நன்றி. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக."  (கிரேஸ்)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.