அன்பரே, உன் விசுவாசம் பரீட்சிக்கப்பட்டு சோதிக்கப்படுகிறதா?
இன்று தேவன் மீதான விசுவாசத்தில் நம் வாழ்க்கையில் நாம் கொண்டிருக்க வேண்டிய அத்தியாவசியமானதும், அடிப்படையானதுமான ஒரு விஷயத்தைப் பற்றி நான் பேச விரும்புகிறேன்!
உனக்கு விசுவாசம் இல்லையா? உன் விசுவாசம் பரீட்சிக்கப்பட்டு சோதிக்கப்படுகிறதா? இயேசுவை நம்புவதும் அவருக்குக் கீழ்ப்படிவதும் ஒருவர் தன் வீட்டைக் கன்மலையின் மீது கட்டுவதைப் போன்றது என்று அவர் சொல்கிறார். வாழ்க்கையின் புயல்கள் வரும்போதும், உன் வாழ்க்கையை அவை தன் முழு பலத்துடன் தாக்கும்போதும், அவை கடந்து செல்லும்வரை ஸ்திரமாக நிற்கும் திறனை அவர் உனக்கு வழங்குகிறார்!
உன்னைத் தேற்றவும், உனக்கு உதவி செய்யவும், வழிகாட்டவும், மற்றும் குணப்படுத்தவும் இயேசு எப்போதும் உன்னோடு இருக்கிறார். உலகத்தின் முடிவுபரியந்தம் அவர் எப்போதும் உன்னுடன் இருக்கிறார். (வேதாகமத்தில் மத்தேயு 28:20ஐப் பார்க்கவும்)
உன் முழு வாழ்க்கையும் விசுவாசத்தால் ஆளுகை செய்யப்பட வேண்டும் - அதாவது, "'விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்'" என்று எழுதியிருக்கிறபடியே, உன் வாழ்க்கை, தேவனையும் அவருடைய வார்த்தையையும் விசுவாசிப்பதன்மூலம் ஆளுகை செய்யப்பட வேண்டும் (வேதாகமத்தில் கலாத்தியர் 3:11ஐப் பார்க்கவும்)
தேவன் ஒரு காரியத்தைச் செய்வதாக வாக்குப்பண்ணினால், அவர் அதை நிச்சயம் செய்வார், ஏனென்றால் அவரால் பொய் சொல்ல முடியாது! உன் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்தார். அல்லேலூயா! “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது” என்று அவருடைய வார்த்தையில் எழுதப்பட்டிருக்கிறபடி அவர் நமக்கு வாக்குப்பண்ணியதை நிறைவேற்றுவார் (வேதாகமத்தில் ரோமர் 15:4ஐப் பார்க்கவும்)
அன்பரே, இன்று கர்த்தர் உன் விசுவாசத்தை இன்னும் அதிகமாய் பலப்படுத்துவாராக!
ஆண்டவருக்கே மகிமை: “5 ஆண்டுகளுக்கு முன்பு பரிதாபமாக இறந்த என் பெற்றோருக்காக நான் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற இந்த மின்னஞ்சலானது நான் மறுபடியும் மகிழ்ந்து சந்தோஷமாய் இருக்கும்படி, எனக்கு ஆறுதலையும் தன்னம்பிக்கையையும் தருகிறது." (ஜாய்)
