• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 16 செப்டெம்பர் 2023

அன்பரே, உன் வார்த்தைகளுக்கு வல்லமை உண்டென்பது உனக்குத் தெரியுமா?

வெளியீட்டு தேதி 16 செப்டெம்பர் 2023

வாயின் வார்த்தையானது மிகவும் பலமுள்ளது. வேதாகமம் சொல்கிறது, “அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்." (நீதிமொழிகள் 18:20)  

ஆகையால், விஷயங்களை அறிக்கையிடுவது அல்லது உச்சரிப்பது, குறிப்பாகத் திரும்பத் திரும்பச் சொல்லுவதால் அந்த விஷயத்தை நாம் இன்னும் அதிகமாக நம்புகிறோம். நாம் விசுவாசிக்கும்போது, அவை நடக்கும்... அவை நிறைவேறும்!

ஒருமுறை ஒருவர், “உன் ஆத்துமாவிற்கு உபதேசம் செய்" என்று சொன்னதைப்போலவே, உன்னைக் குறித்த நேர்மறையான விஷயங்களை நீ உன்மீது அறிக்கையிடும்படி இன்று நான் உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன் அன்பரே.

பின்வருவனவற்றை சத்தமாகவும், விசுவாசத்துடனும் உன்மீது நீ அறிக்கையிடு, “நான் அதிக மதிப்பைப் பெற்றிருக்கிறேன். இயேசு தம்முடைய ஜீவனையே எனக்காகக் கொடுத்திருக்கிறார். நான் விலையேறப்பெற்றவன் / விலையேறப்பெற்றவள். நான் கிறிஸ்துவுக்குள் வெற்றிசிறந்த நபராய் இருக்கிறேன்! நான் தேவனுடைய பிள்ளை, என் பரலோகப் பிதா என்னைப் பாதுகாக்கிறார்.  ஆண்டவர் என்னோடு இருப்பதால் நான் எதற்கும் பயப்படத் தேவையில்லை!" 

நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொள்வது எப்படி என்பதை அறிந்துகொள்வது மிகவும் நல்லது! இது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக் கூடும்... குறிப்பாக, நாம் எதிர்மறையான எண்ணங்களினால் சோர்வடையும்போதோ அல்லது குழம்பியிருக்கும்போதோ நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொள்வது நம் வாழ்வையே மாற்றக்கூடியதாக இருக்கும்.

தேவனுடைய வார்த்தையிலிருந்து இந்த சத்தியங்களை அறிவிப்பதன் மூலம், நம் எண்ணங்களின் போக்கும்... நம் வாழ்க்கையும் மாறிவிடும்.

உன்னை நீயே ஊக்குவித்துக்கொள்ள தயங்காதே, அன்பரே! அது உன் வாழ்க்கையை மாற்றவல்லது. 

சாட்சி: “ஆண்டவர் என் வாழ்க்கையில் உள்ள மலைகள் போன்ற பிரச்சனைகளைப் பெயர்ந்துபோகும்படி செய்கிறார்! 34 வயதான எனது மூத்த மகன் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டான்! இது கடந்த இரண்டு வாரங்களுக்குள் நடந்தது. அவனும் எனது இளைய மகனும் கடந்த 10 வருடங்களாக என்னிடமிருந்து பிரிந்து வாழ்கின்றனர். என் இளைய மகன் என்னை அவனது வாழ்க்கையிலிருந்து முற்றிலும் ஒதுக்கித்தள்ளிவிட்டான். அந்த மலை போன்ற பிரச்சனையையும் ஆண்டவர் அப்புறப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன்! என் மூத்த மகன் தன் ஜீவனை ஆண்டவருக்காக அர்ப்பணித்து என்னையும் தன்னையும் மன்னித்துவிட்டான் என்பதை அறிந்துகொண்ட இந்த தினம்தான் இத்தனை வருடங்களில் நான் கண்ட சிறந்த தினமாகும்! உங்கள் ஊழியத்திற்காகவும் உங்களுக்காகவும் நான் ஆண்டவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்!!!"  (டெய்சி)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.