வெளியீட்டு தேதி 30 டிசம்பர் 2024

உன் விரல்கள் மற்றும் உன் நாவை உன்னால் கட்டுப்படுத்த முடியுமா? 🤔

வெளியீட்டு தேதி 30 டிசம்பர் 2024

புத்தாண்டு தீர்மானங்கள் குறித்து உன் கருத்து என்ன?  ஜனவரி 1ஆம் தேதி முதல் உன் உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமாக சாப்பிடுவது அல்லது புதிய காரியங்களைக் கற்றுக்கொள்வது போன்று, வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்த நீ எப்போதாவது தீர்மானித்திருக்கிறாயா?

ஒவ்வொரு புதிய ஆண்டின் துவக்கத்திலும் எனக்குள் எழும் ஊக்கத்தை நான் விரும்புகிறேன். நீண்ட நாட்களுக்கு அதைக் கடைப்பிடித்து, என்னால் வெற்றி பெற முடிவதில்லை 😏 என்றாலும், வழக்கமாக சில தீர்மானங்களை எடுக்க நான் முயற்சிப்பதுண்டு. 

நாம் புதிய ஆண்டிற்குள் பிரவேசிக்க இருப்பதால், வரும் நாட்களுக்கான சில சிறந்த புத்தாண்டுத் தீர்மானங்களை நான் உனக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன் — இவற்றை வேதாகமத்தின் அடிப்படையில் நான் பரிந்துரைக்கிறேன் 😃.

உன் நாவைக் கட்டுப்படுத்து 🫢 : இன்று முதல் இதைக் கடைப்பிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கலாம். இதன் அர்த்தம், உன் வார்த்தைகளைக் குறித்து மிகவும் கவனமாக இரு மற்றும் நீ பேசுவதற்கு முன் சிந்தித்துப் பேசு என்பதாகும். 

  • "வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து."நீதிமொழிகள் 4:24 
  • “பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம். சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.” (நீதிமொழிகள் 12:18-19)

சண்டையின்போது இந்த வசனத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்:

  • "மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்." (நீதிமொழிகள் 15:1-2, 4)

வதந்திகளைப் பரப்புவதிலிருந்து விலகி இருப்பதுதான் இதன் அர்த்தம்:

  • "புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்." (நீதிமொழிகள் 11:13)
  • "மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்."  – (நீதிமொழிகள் 16:28)

நமது டிஜிட்டல் காலத்தில், உன் நாவைக் கட்டுப்படுத்துவது என்பது உன் விரல்களைக் கட்டுப்படுத்துவதையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறது. ஒரு செய்தியை அனுப்பும்போது அல்லது சமூக ஊடகங்களில் ஒரு பதிவை செய்யும்போது புத்திசாலித்தனமாக இருப்பதைப் பற்றித்தான் நான் பேசுகிறேன். 

இணையத்தை பயன்படுத்துவதில் நமக்கு உள்ள சுதந்திரம், ஆன்லைனிலும் கூட நமது வார்த்தைகளுக்கு வல்லமை உண்டு என்பதை மறந்துவிடச் செய்கிறது. 

நன்றாக நினைவில் வைத்துக்கொள், ஜீவன் மீதும் மரணத்தின் மீதும்  உன் நாவுக்கு அதிகாரம் இருக்கிறது (நீதிமொழிகள் 18:21), எனவே உன் வார்த்தைகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடு!

“கர்த்தாவே, நாவைக் கட்டுப்படுத்தும் வலிமையையும் ஞானத்தையும் அன்பரேக்கு கொடுத்ததற்கு நன்றி! எப்போதும் ஜீவனுக்கு ஏதுவான வார்த்தைகளைப் பேச உதவுவீராக, ஆமென்”

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.