• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 19 செப்டெம்பர் 2024

உன் வாழ்க்கையை விரக்தியில் நீ வாழ வேண்டுமா? 🤔

வெளியீட்டு தேதி 19 செப்டெம்பர் 2024

பியூலா தனது உடன் பிறந்த சகோதரியை இழந்துவிட்டாள்; அதனால் ஏற்பட்ட வலி, கண்ணீர் மற்றும் பிரிவின் சோகம் ஆகியவை அவளை விரக்தி நிறைந்த வாழ்க்கைக்குள் மூழ்கடிக்கத் தொடங்கியது.  அவளுடைய சகோதரி இப்போது இல்லை என்றாலும், அவளுக்கு ஆறுதலளிப்பவராக கர்த்தர் எப்போதும் அவளுக்கு அருகில் இருக்கிறார் என்பதை அவள் உணரும்படி ஆண்டவர் அநுக்கிரகம் செய்தார். வாழ்க்கை வாழத் தகுந்தது என்பதை அவள் பார்க்க வேண்டும் என்று இயேசு விரும்பினார்.

பியூலாவின் வாழ்வில் நடந்ததைப் போலவே உன் வாழ்விலும் ஏதாகிலும் நடந்ததாக உணர்கிறாயா? ஆம், சில நேரங்களில் வாழ்க்கை கடினமாக இருக்கும். சோதனைகள் கடுமையாக நம்மைத் தாக்கக்கூடும். பின்வாங்குதல், கடந்த காலத்தைக் கற்பனை செய்தல் மற்றும் நிகழ்காலத்தில் விரக்தியடைதல் போன்ற அபாயங்களை நீ எதிர்கொள்ளலாம். எதிர்காலத்தைப் பார்க்கையில், இருள் மட்டுமே உன் கண்ணுக்குத் தெரியலாம்.

அன்பரே, சில சமயங்களில் விரக்தியடைய நியாயமான காரணங்கள் இருக்கலாம், விரக்தியிலேயே இருப்பதிலும், விரக்தியடைந்த வாழ்க்கையை தொடர்ந்து வாழ்வதிலும் ஒரு அர்த்தமும் இல்லை என்று நான் நினைக்கிறேன். 

“ஆனால் சகோதரர் எரிக், செய்வதை விடச் சொல்வது எளிது! மிகப்பெரிய வாக்குவாதங்கள் ஏற்பட்டன. நான் இருக்கும் இடத்தில் நீங்கள் இருப்பீர்களானால் அப்பொழுது புரிந்துகொள்வீர்கள்" என்று நீ என்னிடம்‌ சொல்லலாம்.

உண்மைதான்... நான் உன் இடத்திலோ அல்லது பியூலாவின் இடத்திலோ இல்லை. ஆனாலும்... விரக்தியில் வாழ்வதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை. விரக்தி நம்மை சிக்க வைக்கிறது என்று நான் நம்புகிறேன். அது ஒரு சிறைச்சாலை, துன்பம் நிறைந்த ஒரு இடம். நீயும் நானும் அதற்காகப் படைக்கப்படவில்லை. வலி மற்றும் விரக்தியை வேறுபடுத்துவது முக்கியம். 

நாம் விரக்தியைப் பற்றிக்கொள்வதும், தொடர்ந்து அதில் வாழ்வதும் உண்மையிலேயே ஆண்டவரது  சித்தத்துக்கு எதிரான ஒரு செயல் ஆகும். நாம் விடுதலையோடு இருக்கவும், நம் இதயங்கள் ஆறுதலடையவும், எல்லா பாரங்களிலிருந்தும் சுமைகளிலிருந்தும் விடுவிக்கப்படவும் அவர் விரும்புகிறார். ஆகவே, எனக்கு பாரமாய் இருப்பவைகளை ஆண்டவர் மீது வைத்துவிடத் தீர்மானிக்கிறேன். ஏனென்றால் அவருடைய உதவியின்றி என்னால் எதுவும் செய்ய முடியாது!  சில நேரங்களில், விரக்தியை என்னால் தனியாகக் கையாள முடிவதில்லை. எனவே நான் ஆண்டவரிடத்தில் திரும்புகிறேன்.  நீயும் அவ்வாறே செய்ய நான் உன்னை அழைக்கிறேன்.

ஆண்டவருடைய வார்த்தை கூறுகிறது, "அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்." (2 கொரிந்தியர் 12:10)  

நீ பலவீனமாக இருக்கும்போதே இயேசுவில் நீ பலமுள்ளவனாக / பலமுள்ளவளாக இருக்கிறாய்! ஆண்டவருக்கு முன்பாக உன் பலவீனத்தை அங்கீகரிப்பதன் மூலம், அவர் உனக்குள் செயல்பட நீ அவரை அனுமதிக்கிறாய். விரக்தியிலிருந்தும் அதன் எதிர்மறையான, அழிவுக்கு ஏதுவான விளைவுகளிலிருந்தும் அவர் உன்னை விடுவிப்பார். ஆம், உன் சுமைகளையெல்லாம் நீக்கி, உன்னை விடுவிக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்... அவர் பியூலாவுக்குச் செய்ததுபோல உனக்கும் செய்வார்.

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “'அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் மூலம் ஆண்டவர் என்னுடன் பேசுவதை நான் விரும்புகிறேன். எனக்கு ஊக்கம், அன்பு, அறிவுரை, ஞானம் தேவைப்படும்போது, ​​அவர் எப்போதும் என்னுடன் இருக்கிறார். உங்களது வார்த்தைகளை வாசிப்பதன் மூலம் அவை எனக்குக் கிடைக்கின்றன. எரிக், நம் ஆண்டவர் மற்றும் இரட்சகரின் உதவிக்காகக் காத்திருக்கிற ஆத்துமாக்களைத் தொட ஆண்டவர் உங்களைப் பயன்படுத்துகிறார். நமது ராஜாவாகிய இயேசுவுக்கே நன்றி கூறி துதிகளை ஏறெடுக்கிறேன்.❤" (லிசா, ஏற்காடு)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.