வெளியீட்டு தேதி 10 ஜூலை 2023

அன்பரே, உன் வழிகளில் தேவனை நினைத்துக்கொள்

வெளியீட்டு தேதி 10 ஜூலை 2023

நீதிமொழிகள் 3:6

இது தியானிப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் ஒரு அருமையான வசனம்.

"உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்."

நம்முடைய எல்லா வழிகளிலும் நாம் தேவனை நினைத்து, அவரது சித்தப்படி நடந்தால், அவர் நம் பாதைகளை செவ்வைப்படுத்துவதாக நமக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார்.  ஆகவே, அன்பரே…

  • நீ நடக்கிற பாதை கடினமானதாக உள்ளதா? உன் வழிகளில் தேவனை நினைத்துக்கொள்.
  • சோதனை மிகவும் கடினமானதாக உள்ளதா?  தேவனை நினைத்துக்கொள்.
  • இதற்குத் தீர்வே இல்லை என்று எண்ணி, ஏதோ ஒரு காரியத்தைக் குறித்து திகைத்துக்கொண்டிருக்கிறாயா? தேவனை நினைத்துக்கொள்.
  • வியாதி உன்னை வாட்டிவதைக்கிறதா? தேவனை நினைத்துக்கொள்.
  • நீ வேலையில்லாமல் கலங்கிக்கொண்டிருக்கிறாயா? தேவனை நினைத்துக்கொள்.
  • சண்டைகள் மற்றும் போராட்டங்களால் சோர்ந்துபோய் இருக்கிறாயா?  தேவனை நினைத்துக்கொள்.

நீ நடக்க வேண்டிய பாதையை உனக்குக் காட்டி, உன்னை அவர் வழிநடத்துவார். உனக்காக அவர் செயல்படப்போகிறார். அவர் உனக்கு ஒரு அதிசயம் செய்யப்போகிறார். அவர் அதை உனக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார்!

என்னுடன் சேர்ந்து ஜெபி: “தேவனே, இன்று எனக்கு எதிராக வரும் ஒவ்வொரு யுத்தத்திலும், நான் உம்மையே நினைத்து உம் வழிகளை சார்ந்துகொள்ள விரும்புகிறேன்! நீர் என் சார்பாக செயல்படப் போகிறீர்… நான் நடக்க வேண்டிய வழியைக் காண்பித்து, நீர் என்னை வழிநடத்துவீர். உமது வாக்குத்தத்தங்களுக்காக நன்றி!  உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Eric Célérier
எழுத்தாளர்