• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 29 அக்டோபர் 2023

உன் விசுவாசம் முடங்கிவிட்டதா?

வெளியீட்டு தேதி 29 அக்டோபர் 2023

விசுவாசம் என்பது வாழும் ஒரு நுண்ணுயிர் போன்றது. அது வளரவும் செய்யலாம் அல்லது குறைந்தும் போகலாம். அது வளர வேண்டுமானால், ஆண்டவர் மீதும் அவருடைய வார்த்தையின் மீதும் நாம் வைத்திருக்கிற நம்பிக்கை அதற்கு ஊட்டப்பட வேண்டும். அதே நேரத்தில், சந்தேகம், ஆண்டவர் மீதான விசுவாச குறைவு, ஆகிய இவைகள் நம் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தினால், நம் விசுவாசம் அப்படியே வளர்ச்சியடையாமல் "நிறுத்தப்படலாம்".

உனக்கு நல்லதொரு உதாரணத்தை வழங்குகிறேன், நீ ஒரு வீட்டை அழகுபடுத்தும் வடிவமைப்பாளரை பணியமர்த்துகிறாய், ஆனால் சில அறைகளுக்குள் அவர் செல்வதற்கு நீ மறுப்பு தெரிவிக்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். வடிவமைக்கும்படி நீ அவருக்குக் காட்டிய அறைகளை அவர் நிச்சயமாக மறுசீரமைத்து வடிவமைத்திருப்பார், ஆனால் மற்ற அறைகள் அப்படியே வடிவமைக்கப்படாமல் இருக்கும்... அவற்றில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது, எந்தவித மாற்றமும் செய்திருக்க முடியாது, அது மாறியிருக்காது.

உன் உணர்வுகளையும் உன் இருதயத்தையும் தொடுவதற்கும், உன் வாழ்க்கையை மாற்றுவதற்கும் விரும்பும் தேவ ஆவியானவரின் சூழ்நிலையும் இப்படித்தான் இருக்கிறது. நீ அவருக்குக் கதவைத் திறக்கும் இடத்தில் மட்டுமே அவரால் பிரவேசிக்க முடியும்... வேறுவிதமாகக் கூற வேண்டுமானால், அவரால் பிரவேசிக்க முடிந்த இடங்களில் மட்டுமே, ஜீவனும், சமாதானமும் நம்பிக்கையும் நிறைந்த தமது சுவாசத்தை அவரால் ஊத முடியும். நீ அவருக்கு முழுமையாக இடமளித்திருக்கவில்லை என்றால், உன் வாழ்க்கையின் சில பகுதிகள் பாதிக்கப்படும். எல்லா எண்ணங்களுக்கும் நோக்கங்களுக்கும் தேவையான விசுவாசம், அங்கேயே முடங்கி விடுகிறது...

அன்பரே, இன்று உன் நிலையும் இப்படித்தான் காணப்படுகிறதா? அப்படியானால், நான் உனக்கு மீண்டும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்... எல்லாம் உனக்கு முடிந்துபோய்விடவில்லை. விசுவாசத்தை மீண்டும் அதிகரிக்கப்பண்ண நீ என்ன செய்யலாம்? என்னுடன் சேர்ந்து ஏதாவது ஒரு வகையில் முயற்சி செய்ய உன்னை அழைக்கிறேன். ஆனால் கவனமாக இரு... நீ முற்றிலும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

பின்வரும் கேள்வியை பரிசுத்த ஆவியானவரிடம் கேட்டு, உன் இருதயத்தையும் ஆத்துமாவையும் ஆராய்ந்து பார்க்கும்படி அவருக்கு இடங்கொடு... "பரிசுத்த ஆவியானவரே, என் வாழ்க்கையில் நான் உமக்கு முழுமையான கட்டுப்பாட்டை வழங்க மறுக்கும் பகுதிகள் என்னென்ன?"

உன் ஆவியில் நீ உணர்வதைக் குறித்து வைத்துக்கொண்டு, இந்த ஜெபத்தை என்னுடன் சேர்ந்து ஜெபிக்கவும்… “கர்த்தாவே, இந்தப் பகுதியில் / இந்தப் பகுதிகளில் என் முழுக் கட்டுப்பாட்டையும் நான் உமக்கு அனுமதிக்கவில்லை என்று எனக்குத் தெரிகிறது, இதன் விளைவாக, அது ஒருவித கவலையையும் மனச்சோர்வையும் எனக்கு ஏற்படுத்திவிட்டது. இன்று, இந்த நிலைமை என்னில் மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; நான் உமக்கு என் அனைத்து கட்டுப்பாட்டையும், முழுமையாக, ஒட்டுமொத்தமாகத் தருகிறேன். கர்த்தாவே, இப்போது நான் உம்மிடமிருந்து பெற்றுக்கொள்கிற உமது அன்பிற்காகவும் சமாதானத்திற்காகவும் நன்றி. உம் மீதான விசுவாசம் மீண்டும் எனக்குள் வளர்ந்து வருவதற்காக நன்றி. ஆமென்!”

“உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." (வேதாகமத்தில் யோவான் 14:17ஐ வாசித்துப் பார்க்கவும்) 

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “ஒவ்வொரு நாளும் நான் அனுபவிக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், காரியங்களைத் தள்ளிப்போடுவதுதான், ஆனால் 'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சலை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து,​ திடீரென்று ஒரு மாற்றம் என்னில் ஏற்படுவதை நான் கவனித்தேன், நான் விஷயங்களைத் தள்ளிப்போடுவது குறைந்தது, உங்களது தினசரி செய்தியின் மூலம் ஆண்டவர் என்னை எப்படி உண்மையுள்ளவனாக மாற்றுகிறார் என்பதை எண்ணி நான் வியப்படைகிறேன். உங்களது அழகான செய்திகளுக்காக என் இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன். எரிக் செலரியரே, ஆண்டவர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக” (அந்தோனி)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.