வரலாற்றிலேயே மிகவும் பயமுறுத்துவதாக தோன்றிய குழந்தை👶🏻
கிறிஸ்மஸ் பண்டிகைக்கான நாள் நெருங்கிவிட்டது – பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன! நீ உற்சாகமாக இருக்கிறாயா?
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, நாம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுகிறோம். பூமியில் அவரது வருகை மிகவும் எதிர்பார்க்கப்பட்டது, மேலும் அவரது வருகை பழைய ஏற்பாட்டில், ஏசாயா புத்தகத்தில் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது:
"ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்." (ஏசாயா 7:14)
ஆச்சரியமான விதத்தில், இயேசு பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரிசி இதை எழுதிவைத்தார். இந்த வசனம் நீண்டதொரு காத்திருப்பு பற்றி பேசுகிறது!
கிறிஸ்துமஸ் காலகட்டம் கிறிஸ்துவின் ஒளி வருவதற்காகக் காத்திருத்தல் பற்றி பேசுகிறது, வேதாகம காலங்களில் மட்டும் அல்ல, இப்போதும் நம் வாழ்வில் கிறிஸ்துவின் ஒளி வருவதற்காகக் காத்திருப்பதைப் பற்றி பேசுகிறது!
இயேசு பிறந்தபோது, உலகத்தில் குழப்பம் நிலவியது. இஸ்ரவேல் மக்கள் ரோமர்களால் ஒடுக்கப்பட்டவர்களாய் இருந்தனர், ரோமர்கள் ஏரோதை ராஜாவாக நியமித்திருந்தனர். இயேசுவின் பிறப்பை ஏரோது மிகவும் அச்சுறுத்தலாக உணர்ந்தார், அவருடைய பிறப்பு வருங்கால ராஜாவின் வருகையாகக் கொண்டாடப்பட்டது. இதன் விளைவாக, இரண்டு வயது மற்றும் இரண்டு வயதிற்குக் கீழான அனைத்து சிறுவர்களையும் கொல்ல ஏரோது உத்தரவிட்டார். நீ இந்த சம்பவத்தை மத்தேயு 2ஆம் அத்தியாயத்தில் வாசிக்கலாம். எத்தனை ஒரு பயங்கரமான குழப்பம், பல குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர்! இருப்பினும், அந்த இருளின் மத்தியில், மெய்யான ஒளி உலகிற்குள் வந்தது! (யோவான் 1:9)
இன்றைய நமது உலகமும் குழப்பத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு மட்டுமே, தீராத யுத்தங்கள், கோர பசி, கொடூரமான கற்பழிப்பு வழக்குகள் மற்றும் பெரிய பேரழிவுகள் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டு நாம் அதிர்ச்சியடைந்துள்ளோம்.
கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்விரண்டு யதார்த்த சூழலிலும் ஒரே நேரத்தில் வாழ்கிறோம், நாம் உடைந்துபோன நிலையில் இருக்கிறோம் என்றாலும், இயேசுவின் ஒளியானது இவ்வுலகிலும் நம் வாழ்விலும் பிரகாசிக்கும்படி, அவர் நமக்குக் காணப்படுவார் என்ற நம்பிக்கையில் நாம் விழிப்புடன் காத்துக்கொண்டிருக்கிறோம்.
“நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவவேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம்.” – யோவான் 16:33
அன்பரே, சற்று நேரம் ஒதுக்கி, இயேசு தம்முடைய ஒளியை உலகிற்குக் கொண்டு வந்ததற்காக அவருக்கு நன்றி செலுத்து.
“கர்த்தராகிய இயேசுவே, எங்கள் இருளான வாழ்வில் ஒளியைக் கொண்டுவரும்படி இந்தப் பூமிக்கு வந்ததற்கு நன்றி. என் வாழ்வின் இருண்ட பகுதிகளிலும் உமது ஒளியைப் பிரகாசிக்கச் செய்யுமாறு இன்று நான் ஜெபிக்கிறேன். என் இதயத்தில் உமது ஒளி பிரகாசிக்க வேண்டிய பகுதிகளை எனக்கு வெளிப்படுத்துவீராக. ஆமென்.”
