• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 26 டிசம்பர் 2022

எதிர்பார்ப்புகள் உங்களை அழிக்கலாம் அல்லது கட்டியெழுப்பலாம்...

வெளியீட்டு தேதி 26 டிசம்பர் 2022

கிறிஸ்துமஸ் காலத்தில், எதிர்பார்ப்புகள் வானம் அளவிற்கு உயர்ந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட பரிசைப் எதிர்பார்த்திருந்தது, அதற்க்கு பதிலாக வேறு ஏதாவது கிடைத்து நீங்கள் ஏமார்ந்த சமயங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? எனக்கு நினைவிருக்கிறது. ஆனபோதும், என் ஒவ்வொரு எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்பட்டு நான் எண்ணியில்லாத வழிகளில் நான் நினைத்ததைவிட அதிகாமாக பெற்றுக்கொண்ட தருணங்களும் உள்ளது.

டிசம்பர் 23, 1978 அன்று, ஆண்டவர் என்னை ஆச்சரியப் படுத்தினார். அந்த கிறிஸ்துமஸ் அன்று நான் எந்த சிறப்பையும் எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையில் நான் சோர்வடைந்த நிலைமையில் இருந்தாலும், இயேசுவோடு உறவாடுவதை பற்றி நான் கேட்ட ஒரு செய்தி எனக்கு ஒரு சிறிய நம்பிக்கையைத் தந்தது. எனவே எனது சகோதரர் மிக்கியின் வீட்டிற்கு அவரது குடும்பத்துடன் கொண்டாட சென்றேன். என் அம்மாவும் அப்பாவும் விரைவில் வருவார்கள் என்று எனக்குத் தெரியும், என் பெற்றோர் வருவதற்கு முன்பு என் உள்ளத்தில் இருந்த கோபமும் தற்காப்பும் சிறிது குறைவதை கவனித்தேன். என்னது?

உண்மையைச் சொன்னால், என்னுடைய மனநிலை என்னை ஆச்சரியப்படுத்தியது. நான் என் அப்பாவிடம் ஒரு வருடத்திற்கும் மேலாக பேசாமல் இருந்தேன், அவர் மீது எனக்கு வேதனையும் கசப்பும் மட்டுமே இருந்தது. ஆனால் இயேசுவின் நற்செய்தி நம் இதயங்களை மென்மையாக்கும் ஒரு வித்தியாசமான தன்மையை கொண்டுள்ளது, மேலும் நாம் மீண்டும் விசுவாசிக்க, மீண்டும் அக்கறை கொள்ள, மாற்றங்களை எதிர்பார்த்திருக்க செய்கிறது. ஆண்டவருடைய வார்த்தை சொல்கிறது, "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது". (எபிரெயர் 4:12)

வார்த்தையும் ஆவியும் நீங்கள் அன்புசெய்ய, அக்கரைக் கொள்ள அல்லது மன்னிக்க உங்கள் மீது செயல்பட்டுக்கொண்டிருக்கிறதா?

சரி, என் பெற்றோர் வந்த அந்த இரவு எதிர்பார்த்ததைப்போல் செல்லவில்லை. என் அப்பா நான் நினைத்தது போல் கோபமாகவும், கெட்டவராகவும் இருந்தார், நான் உடனடியாக என் பெட்டியை தாயார் செய்ய என் அறைக்குச் சென்றேன். எனக்கிருந்த ஒரு சிறிய நம்பிக்கையும் இந்த உடைந்த உறவின் உண்மைநிலையினால் சிதைந்துப்போனது. நம்மை சுற்றி இருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் பொதுவாக நமக்கு அதிக வலி மற்றும் காயத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் என் அண்ணன் என் அறைக்குள் நுழைந்து என் கோபத்தைப் பார்த்தார். அவர் என் சோகக் கதையை கேட்டபின், என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார், பின்னர் அதற்க்கு பதிலையும் அளித்தார். "உனக்கு என்ன வேண்டும் என்று உனக்குத் தெரியுமா?” அதற்கு நான், "எனக்கு தெரியவில்லை, மிக், எனக்கு என்ன வேண்டும்?" என்று சொன்னேன். நான் சிறிதும் எதிர்பார்க்காத வகையில் என் சகோதரர் சொன்னது: "இயேசு கிறிஸ்துவுடன் உனக்கு ஒரு பந்தம் தேவை."

அப்போது "ஆம் அண்ணா, அல்லேலூயா! எனக்கு ஒளி தெரிகிறது" என்று சொல்லியிருக்கலாம், ஆனால் அதற்கு பதிலாக, நான் சொன்னது என்னவென்றால், "நான் ஒருபோதும் இயேசுவைப் பெறப் போவதில்லை; மதம் வேலை செய்யாது." என்று.

இந்த கிறிஸ்துமஸ் அன்று நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் உங்கள் ஆசைகள், நம்பிக்கைகள் மற்றும் பொறுப்புகள் அனைத்தையும் இயேசுவிடம் கொண்டு செல்ல நான் உங்களை ஊக்குவிக்கிறேன். ஏனென்றால் இயேசுவுடன் நமக்கு இருக்கும் தொடர்பு மதத்தை சார்ந்தது அல்ல - அது ஒரு உறவை சார்ந்தது.

மேலும், நீங்கள் ஒரு அற்புதம்!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.