• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 2 மார்ச் 2025

அளவற்ற அதிசயங்கள்

வெளியீட்டு தேதி 2 மார்ச் 2025

இன்று, ‘ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி’ என்ற நமது தொடரின் கடைசி நாள். நீங்கள் பின்னடைவை சந்திக்கும்போது என்ன செய்யலாம் என்பதை உங்களுடன் கலந்துரையாடி இதை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

ஆண்டவருடைய ராஜ்யத்திற்கு நாம் பங்குள்ளவர்களாய் இருக்கும்போது, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடங்களில் ஒன்று, காரியங்கள் பெரும்பாலும் அவை தோன்றும்படி இருக்காது.

இதை நான் உங்களுக்கு சற்று விளக்கமாக சொல்ல விரும்புகிறேன்.நமது பார்வையில் பின்னடைவாகத் தோன்றுவது, பொதுவாக ஆண்டவருடைய பார்வையில் வேறு மாதிரி இருக்கக் கூடும், எடுத்துக்காட்டாக:

  • ஒரு பாடம்
  • ஒரு வாய்ப்பு
  • பேரழிவில் இருந்து பாதுகாப்பு
  • பின்னணியில் ஒரு பெரிய திட்டம் ஆகியவை.

அசாதாரண அதிசயங்களாக மாறிய சாத்தியமற்ற சூழ்நிலைகளின் உதாரணங்களால் வேதாகமம் நிரம்பி வழிகிறது, இதை நான் என் சொந்த வாழ்விலும் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறேன்.  இங்கே சில உதாரணங்களைக் குறிப்பிடுகிறேன்:

  • யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டார்; ஆனால் தனது குடும்பத்தையோ பஞ்சத்திலிருந்து காப்பாற்றினார் (ஆதியாகமம் 37-48). 
  • லாசரு மரித்து மூன்று நாட்களாக கல்லறைக்குள் இருந்தார், ஆனால் இயேசுவோ அவரை உயிர்த்தெழச் செய்தார், அவருடைய சாட்சி அநேகரை விசுவாசத்திற்கு நேராக அழைத்துச் சென்றது. (யோவான் 12
  • மரியாள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தாள், இது அவளது கலாச்சாரத்தில் நிந்தனைக்கு உள்ளாக்கும் விஷயம், ஆனால் அவள் தேவ குமாரனாகிய மேசியாவைப் பெற்றெடுத்தாள். (லூக்கா 1 மற்றும் 2)

நாம் ஆண்டவருக்காகத் தொடர்ந்து ஓடுபவர்களாக மாறுகிறோம் என்பதன் அடையாளமாக, நமது பின்னடைவுகளிலும், ‘ராஜ்யக் கண்ணோட்டத்தை’ கொண்டிருக்க வேண்டும். மேலும் அவைகளை, ஆண்டவர் தம் அதிசயமான கிரியைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளாகவும் நாம் காண வேண்டும்.

ஒருமுறை யெஷூவா ஊழியங்களின் பாடல் நிகழ்ச்சி ஒன்று கடைசி நிமிடத்தில் வேதனையளிக்கும் விதமாக ரத்து செய்யப்பட்ட ஒரு சூழலை கேம்ரனும் நானும் எதிர்கொண்டோம். ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் எங்களுக்கு மிகவும் வேதனையளிப்பதாகவும் வருத்தமளிப்பதாகவும் இருந்தது. இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு, அதே வார இறுதியில் மற்றொரு நிகழ்வுக்கு நாங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டோம். அங்கு, நாங்கள் மிகவும் நல்ல விதத்தில் கௌரவிக்கப்பட்டோம், மேலும் பல ஆண்டுகளாக உண்மையுள்ள ஆராதனை ஊழியத்தை செய்ததற்காக கேம்ரன் மக்கள் மத்தியில் வெளிப்படையாக பாராட்டு பெற்றார். இன்றுவரை நாங்கள் பேசும் அனுபவமாக அது இருந்துவருகிறது.

அந்த சம்பவம் எப்போதும் ரோமர் 8:28ஐ எனக்கு நினைவுபடுத்துகிறது, அது இவ்வாறு கூறுகிறது:

"அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." 

அன்பரே, சமீப நாட்களில் உங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை எழுதி, அவற்றை ஆண்டவரிடத்தில் ஜெபத்தில் கொண்டு வாருங்கள். விசுவாசத்தோடு, ஆண்டவர் அந்தச் சூழ்நிலைகளை மாற்றுவதைப் பார்த்து நீங்கள் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்கள் என்பதை அவரிடம் வெளிப்படுத்துங்கள்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.