எளிமையாக ஆரம்பித்தால் போதும்...
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஒருமுறை கூறினார்: "படிக்கட்டுகள் முழுவதையும் உன்னால் பார்க்க முடியாதபோதிலும், முதல் அடியை எடுத்துவைப்பதே விசுவாசமாகும்."
விசுவாசத்தை வெளிப்படுத்துதல் என்பது சில சமயங்களில் நாம் எதற்காக ஒரு காரியத்தைச் செய்ய முயற்சி செய்யாமல், முதல் அடியை எடுத்து வைக்கப் பயப்படுகிறோமோ, அதை மேற்கொள்வதே ஆகும். ஒரு காரியத்தைத் துவங்குதல் என்பது விருப்பத்தேர்வாகும். உன் சிந்தனையின் அடிப்படையிலேயே நீ தேர்ந்தெடுப்பாய்.
உன் ஆத்துமா சந்தேகம் அல்லது பயத்தால் முற்றுகையிடப்பட்டால், அந்த உணர்ச்சிகளை இயேசுவின் நாமத்தில் அமைதிப்படுத்த உனக்கு அதிகாரம் உண்டு. நீ ஆண்டவருடைய பிள்ளையாக இருப்பதாலும், அவரே உன்னுடன் நடப்பதாலும், பயம், சந்தேகம் ஆகிய எண்ணங்களுக்கு உன் மனதிலோ அல்லது உள்ளத்திலோ இடமில்லை என்று சொல்லும் வல்லமை உனக்குள் இருக்கிறது!
பரிசுத்த ஆவியானவர் உன்னை ஏவும் திசையில் செல்வது என்பது முற்றிலும் உன்னுடைய விருப்பம். இந்தத் திசையில் முதல் படி மிகப்பெரிய காரியமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில், அது அப்படி இல்லை: இது உன் மனதில் மட்டுமே அப்படி மிகப்பெரிய காரியமாகத் தோன்றுகிறது! அது உனக்கு எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறதோ, அவ்வளவு பயமுறுத்துகிறது. எனவே... அதன் அளவைக் குறைத்து... சிறியதாக்கு! இது மிகவும் கடினமானது அல்ல! முதல் படி மிகவும் எளிமையானதாக, இப்படிப்பட்ட ஒரு சிறிய காரியமாக இருக்கலாம்:
- போன் செய்தல்.
- ஒரு படிவத்தை நிரப்புதல்.
- உரையாடலைத் தொடங்குதல்.
- "மன்னிக்கவும்" என்று கூறுதல்
உன் கனவு எதுவாக இருந்தாலும் சரி... மகிழ்ச்சியான திருமணம், செழிப்பான தொழில் வாழ்க்கை, சரீர ஆரோக்கியம், பொருளாதார சுதந்திரம் அல்லது வேறு எந்தக் காரியமாகவும் இருக்கலாம். ஆண்டவர் உன்னை அழைக்கும் திசையை நோக்கி இன்றைய தினம் முதல் அடியை எடுத்து வைக்க உன்னால் முடியும்!
இந்த முதல் அடியை எடுத்துவைக்க நீ பயப்படாதே... ஆண்டவர்தாமே உனக்கு முன்பாகச் செல்கிறார்!
வேதாகமம் சொல்கிறது: “நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்." (ஏசாயா 45:2)
அன்பரே, இன்று, ஒரு அடி முன்னோக்கி எடுத்துவைத்துத் தொடங்கு!
