அன்பரே, ஏன் உன் கண்கள் ஆண்டவரை மட்டுமே நோக்கியிருக்க வேண்டும்?
எல்லாம் நன்றாகவே நடக்கிறதா, அல்லது நீ ஒரு சிக்கலான சூழ்நிலையைக் கடந்துபோய்க்கொண்டு இருக்கிறாயா? உன் கண்கள் ஆண்டவரையே நோக்கியிருக்கட்டும், அவரையே நம்பு... அது உன்னை அவருக்கு மிக அருகில் வைத்திருக்கும்.
"என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கின்றன; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.” (வேதாகமம், சங்கீதம் 25:15)
நீ செழிப்பாக இருக்கும்போது, ஆண்டவரைத் தொடர்ந்து விசுவாசிக்கிறாய்; உன் சாந்தம், மற்றும் உன் சமாதானத்திற்கான ஆதாரம் அவர் தான் என்பதை நினைவில் கொள்ள உதவும். ஆண்டவர் உனக்கு யாராயிருக்கிறார் அல்லது அவர் உனக்காக என்ன செய்தார் என்பதை, இந்த உலகில் வேறெதுவும், அதாவது எந்தவொரு நபரோ, நிறுவனமோ அல்லது அதிகாரமோ - ஈடுகட்ட முடியாது.
உன் தலைக்கு மேல் இருக்கிற பாரம் நிறைந்த சுமைகளை அப்புறப்படுத்த எந்த வழியும் இல்லை என்று தோன்றும் நேரத்தில் ஆண்டவரை விசுவாசி. அப்போது “ஏன்” என்ற கேள்விகளை விட, எல்லாவற்றிற்கும் தீர்வாகக் காணப்படுகிற ஆண்டவரை மட்டுமே உன் கண்கள் நோக்கியிருப்பதற்கான வல்லமையைப் பெற்றுக்கொள்வாய்.
ஆண்டவர் மீது தொடர்ந்து விசுவாசம் வைத்து, அவருடைய சமாதானம், அவரது மாறாத தன்மை மற்றும் அவரது சாந்தத்தைப் பெற்றுக்கொள். நல்ல மற்றும் மோசமான நேரங்களில், வியாதி மற்றும் ஆரோக்கியத்தில், பரிபூரணம் மற்றும் வறுமையில் அவரை விசுவாசி…
இன்று, ஆண்டவரை விசுவாசிக்கவும், உன் பார்வை மற்றும் உன் எண்ணங்களை அவர் மீது பதியவைக்கவும் நான் உன்னை ஊக்குவிக்கிறேன், அன்பரே, அவரையே விசுவாசி!
