அன்பரே, ஏன் நீ ஆண்டவரையே நோக்கிப் பார்க்க வேண்டும்?
எல்லாம் சுமூகமாக நடந்தாலும் சரி, அல்லது நீ ஒரு சிக்கலான சூழ்நிலையில் இருந்தாலும் சரி, உன் கண்களை ஆண்டவரின் மீது பதித்து, அவரை நம்பு... அது உன்னை அவருக்கு அருகில் கொண்டுசெல்லும்.
"என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்." (சங்கீதம் 25:15)
சூரியன் பிரகாசித்து சகலமும் பிரத்தியட்சமாகக் கண்ணுக்குப் புலப்படும்போது, ஆண்டவரைத் தொடர்ந்து விசுவாசிப்பது, அவரே உன் மனஅமைதிக்கும், உன் சமாதானத்திற்கும் ஆதாரம் என்பதை நினைவில் வைக்க உனக்கு உதவும். ஆண்டவர் உனக்கு எப்படிப்பட்டவராய் இருக்கிறார் என்பதையும் அவர் உனக்காக என்ன செய்திருக்கிறார் என்பதையும், இந்த உலகில் உள்ள எதுவும் - எந்தவொரு நபரும், நிறுவனமும் அல்லது சக்தியும் ஒருக்காலும் மாற்ற முடியாது.
உனக்கு பாரமாக உள்ளவற்றை எதுவும் ஒன்றும் செய்ய முடியாது என்று தோன்றும்போது, ஏன் என்று கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு, எல்லாவற்றிற்கும் பதிலாய் இருக்கிறவரை நோக்கிப் பார்த்து அவரை விசுவாசிப்பது உனக்கு நலமாய் இருக்கும்.
தொடர்ந்து ஆண்டவர் மீது உன் நம்பிக்கையை வைத்து, அவருடைய சமாதானத்தையும், அவருடைய பலத்தையும், நல்வாழ்வையும் பெற்றுக்கொள்வாயாக. நன்மையை அனுபவிக்கும் நாட்களிலும் தீமையை அனுபவிக்கும் நாட்களிலும், வியாதியின்போதும் ஆரோக்கியமாக இருக்கும்போதும், நிறைவாக பெற்றுக்கொள்ளும் காலங்களிலும் மற்றும் வறுமையை அனுபவிக்கும் காலங்களிலும் ஆண்டவரை விசுவாசிக்கப் பழகிக்கொள்.
