• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 14 ஜனவரி 2024

ஒரு இரகசியத்தை நீ அறிய விரும்புகிறாயா?

வெளியீட்டு தேதி 14 ஜனவரி 2024

ஒரு இரகசியத்தை நீ அறிய விரும்புகிறாயா? இயேசுவின் நாமத்தை உயர்த்தும் பாடல்கள் மிகப்பெரிய வல்லமையையும் விடுதலையையும் கொண்டுள்ளது என்பதுதான் அந்த இரகசியம்.

துதியின் வல்லமையை வேதாகமம் நமக்கு வெளிப்படுத்திக்காட்டுகிறது. பவுலும் சீலாவும் நியாயமற்ற முறையில் சிறையில் அடைக்கப்பட்டபோது, அவர்கள் ஆண்டவருடைய மகிமையைப் பாடத் தொடங்குகிறார்கள். புலம்புவதற்கும் தங்களுக்குத் தாங்களே அனுதாபப்படுவதற்கும் பதிலாக, அவர்கள் தங்களது குரலை உயர்த்தி இயேசுவைத் துதிக்கத் தீர்மானிக்கிறார்கள்.

அவர்கள் இயேசுவின் நாமத்தை உயர்த்தித் துதித்துக்கொண்டிருந்த வேளையில், “சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.” எத்தனை ஒரு அதிசயம்! (வேதாகமத்தில்‌ அப்போஸ்தலர் 16:25-26ஐப் பார்க்கவும்)  

துதி மற்றும் ஆராதனை செய்வதால் இதே வல்லமை உனக்கும் கிடைக்கும். உன் வாழ்க்கையிலும் கதவுகள் திறக்கப்படவோ அல்லது சங்கிலிகள் தகர்க்கப்படவோ வேண்டியிருக்கிறதா?

அன்பரே, இன்று நீ இயேசுவைத் துதி! முழு பெலத்துடனும் நம்பிக்கையோடும் அவரைத் துதித்துப் பாடு! அவர் சகல துரைத்தனத்துக்கும், அதிகாரத்திற்கும் மேலானவர் என்பதை விசுவாசித்து, அறிக்கையிட்டு, அவரை சார்ந்துகொண்டு துதி செய்! அதன் பின்னர் உன் வாழ்வில் நடக்கும் அதிசயமான விஷயங்களை உன்னால் பார்க்க முடியும்.

சங்கீதத்தில் தாவீது ராஜா இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்."  (வேதாகமத்தில் சங்கீதம் 18:3ஐப் பார்க்கவும்)  

அன்பரே, துதிக்குப் பாத்திரரைத் துதித்துப் பாடி, கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறாள்/கூப்பிடுகிறான்! ஆதலால் இவள்/இவன் சத்துருக்களிடமிருந்து விடுவிக்கப்படுவான்/விடுவிக்கப்படுவாள். ஆமென். என் நண்பனே/தோழியே, இன்றைக்கே இதை நம்பு!

“விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்” என்ற இந்தப் பாடலைக் கேட்டு ஆண்டவரைத் துதித்து விடுதலையை அனுபவி. மெய்யான விடுதலை உன் வாழ்வில் கடந்துவருவதாக.

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.