வெளியீட்டு தேதி 24 ஆகஸ்ட் 2024

ஒரு சீஷனுக்கு இன்றியமையாதது எது?

வெளியீட்டு தேதி 24 ஆகஸ்ட் 2024

இந்த வாரம், “சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.” என்பதைப் பார்த்தோம். (லூக்கா 6:40

இயேசுவின் சீஷனாக மாறுவதற்கும், அவரைப்போல வளருவதற்கும் அதிக சமயம் தேவைப்படும்... அதுவும், வாழ்நாள் முழுவதும் அதற்கு தேவைப்படும்!  ஆனால் இந்தப் பயணத்தின்போது உண்மையிலேயே ஒரு விஷயம் முக்கியமானதாக இருக்கிறது, அது: இயேசுவுடன் நேரத்தை செலவிடுவதுதான்.

கூடலூரைச் சேர்ந்த மேரி எனக்கு இந்த சாட்சியை அனுப்பியிருந்தார்: “‘அனுதினமும்  ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் செய்தியை வாசிப்பதன் மூலம், ஆண்டவர் ஜீவிக்கிறார் என்பதை இப்போது நான் உறுதியாக நம்புகிறேன். எனது சந்தேகம் மற்றும் சிரமத்தின் தருணங்களில் எப்போதும் அவரை நம்பும்படி அவர் என்னிடம் கேட்கிறார்; அதைத்தான் நான் செய்து வருகிறேன். மற்றவர்களைப் பற்றிய எனது பார்வை மாறிவிட்டது; நான் அதிக சகிப்புத்தன்மை கொண்டவளாய் இருக்கிறேன். அவருக்குக் கீழ்ப்படிவதற்கான அவருடைய வார்த்தையை நன்றாகப் புரிந்துகொள்வதே எனது முன்னுரிமை, மேலும் ஒவ்வொரு நாளும் வேதாகமத்தை வாசிக்கத் தீர்மானித்துள்ளேன்.”

ஆண்டவருடைய வார்த்தையை நன்கு புரிந்துகொள்வதும், ஒவ்வொரு நாளும் அதை வாசிப்பதும் ஒரு சீஷனுக்கே உரிய  இன்றியமையாத முன்னுரிமையாகும். ஏனென்றால் நீ அதை வாசிக்கும்போது:

  • அவருடைய அறிவுரைகளைப் பெறுவாய்,
  • அவரது இதயத்தைப் புரிந்துகொள்வாய்,
  • மேலும் அவருடைய சித்தத்தை அறிந்துகொள்வாய். 

இவ்வாறு செய்வதால், வேத வசனத்தின்படி உண்மையாக, ஆண்டவர் உனக்காக விரும்பும் ஒரு வாழ்க்கையை நீ வாழ முடியும்!

இந்த நாள் முழுவதும் ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “ஒவ்வொரு நாளும் நான் என் வாழ்க்கையின் அன்பானவரோடு நேரத்தை செலவிடுகிறேன், அவர் என் சிறந்த சிநேகிதர்; அவரே என் ஆண்டவரும், என் இரட்சகருமாகிய இயேசு. நான் எவ்வளவு நேசிக்கப்படுகிறேன் என்பதையும், எவ்வளவு விலையேறப்பெற்ற நபர் என்பதையும் அவர் எனக்குக் காட்டுகிறார். அது என்னை மேலும் அவரை நேசிக்க வைக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒருமனதோடு, அவரை விட்டு விலகாமல் இருக்க என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி.  என்ன நடந்தாலும், என் அற்புதமான ஆண்டவரை நான் இன்னும் துதிப்பேன். 🛐✝” ( டார்வின், சீர்காழி)

Eric Célérier
எழுத்தாளர்