கர்த்தருக்கு "முழு அதிகாரத்தையும்" கொடுத்துவிடு!
பல ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டு பெதஸ்தா குளத்தின் அருகே கிடந்த ஒரு மனிதனின் கதையை நாம் யோவான் எழுதின சுவிசேஷத்தில் வாசிக்கலாம்.
"படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதியஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்." (வேதாகமத்தில் யோவான் 5:6ஐ வாசித்துப் பார்க்கவும்)
ஆண்டவர் இயேசு இப்படி கேட்பது விசித்திரமாக தெரிகிறது, ஏனென்றால் அவர் குணமாக்க வல்லவர் என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். “அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய்விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.” (யோவான் 5:7)
பெதஸ்தாவின் குளத்தில் ஒரு வியாதியஸ்தன் குணப்பெற விரும்பினால், பின்வருபவை சம்பவிக்கும்...
- ஒரு தேவதூதன் தண்ணீரைக் கலக்குவான்.
- ஒரு வியாதியஸ்தன் குளத்தில் இறங்குவான்.
- வியாதியஸ்தன் குணமடைவான்.
ஆனால் இயேசு இங்கே என்ன செய்கிறார்? அவர் இந்த மனிதனை குணப்படுத்துகிறார். எப்படி? எழுந்து, அவனது படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்கச் சொல்லி அவனுக்குக் கட்டளையிடுவதன் மூலம் குணப்படுத்துகிறார்.
ஒரு மனிதனைக் குணப்படுத்துவதற்காக நிறுவப்பட்ட முறையையும், கைக்கொள்ளப்பட்ட பாதையையும் இயேசு விட்டுவிட்டு வேறுவிதமாக செயல்பட்டார்.
தேவன் உன் வாழ்க்கையில் செயல்பட முடியும் என்று நீ நம்புகிறாயா? அவரைத் தீவிரமாக நம்புவதற்கு நீ ஆயத்தமா? இதை அவர் எப்படி செய்ய விரும்புகிறாரோ, அப்படியே செய்யும் அளவிற்கு, அவருக்கு "முழு அதிகாரத்தையும்" கொடுத்துவிடுவாயா?
என் நண்பனே/தோழியே, தேவன் உன்னை நேசிக்கிறார், அவர் உனக்குத் தீங்கு விளைவிக்கும் எதையும் ஒருபோதும் செய்யமாட்டார். உன்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிய ஒரு நிலைமை நன்மைக்கு ஏதுவாக மாறுவதை நீ காண விரும்பினால், தேவன் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து, இன்று உனது அற்புதத்தைப் பெற்றுக்கொள்ள உன்னை அழைக்கிறேன்!
