வெளியீட்டு தேதி 18 டிசம்பர் 2022

கர்த்தர் உங்கள் பாவங்களை அழித்து போடுவார்!

வெளியீட்டு தேதி 18 டிசம்பர் 2022

ஆண்டவர் உங்கள் சார்பாக தம்முடைய கிருபையை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறார்.

கிறிஸ்துவில் பிரியமான என் நண்பரே, உங்கள் தவறுகளின் அளவு,  கர்த்தர்  உங்கள் மேல்  வைத்திருக்கும் அன்பை ஒருபோதும் தீர்மானிக்காது. இது மிகவும் தெளிவாகத் தெரிந்தாலும், இன்னும் சில சமயங்களில் நீங்கள் குற்ற உணர்ச்சியின் கீழ் நசுக்கப்படலாம். “என்னால் ஜெபிக்க முடியாது” அல்லது “இந்த நிலையில் நான் கர்த்தருக்கு முன்பாக செல்ல முடியாது” என்று எண்ணும்  அளவிற்கு கூட உங்கள் நிலைமை செல்லலாம்.

தேவனின் உதவியின்றி ஒருவராலும் தன்னை தானே சுத்திகரிக்கவோ விடுவித்துக்கொள்ளவோ முடியாது.  கர்த்தரால் மட்டும் தான் நம்மை கழுவமுடியும், மீட்க முடியும். அவர் தாமே நம்மை கழுவுகிறார். அவர்தான் நம்மை மீட்டுக்கொள்கிறார். நீங்கள்  செய்ய வேண்டியது எல்லாம் வெறுமனே அவரை அணுகி , தேவை என்று உணர்ந்தால், அவரிடம்  மன்னிப்பைக் கேளுங்கள். அவர் உண்மையுள்ளவர், நல்லவர். அவர் உங்கள் பாவங்களை அழித்து போடுவார்! இயேசு வேதாகமத்தில் அறிவிப்பது இதுவே…

"பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன், என்றார்." (வேதாகமம், மத்தேயு 9:13

உங்கள் நிலைமை என்னவாக இருந்தாலும், கர்த்தர்  உங்களைப் அப்படியே  ஏற்றுக்கொள்கிறார். அவரது கைகள் திறந்திருக்கும், உங்களைச் சூழ்ந்துகொண்டு ஆறுதல்படுத்த எப்போதும் தயாராக இருக்கும். அவர் இரக்கம் உள்ளவர். அன்பு நிறைந்தவர். நண்பரே, உங்கள் சார்பாக அவருடைய கிருபையை வெளிப்படுத்துவதில் அவர் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறார்!

நீங்கள் விரும்பினால், இந்த ஜெபத்தை என்னுடன் சொல்ல நான் உங்களை வரவேற்கிறேன்: “என் தேவனே, நான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன். இந்த சுமையை  என் இதயத்திலிருந்து நீக்கும்படி  நான் ஜெபிக்கிறேன். நான் உன்னில் உண்மையான சுதந்திரத்தை பெற்று வாழ விரும்புகிறேன், உமது கிருபையைப் பெற விரும்புகிறேன். உம் பேரிரக்கத்திற்கு நன்றி. இயேசுவின் நாமத்தில், ஆமென்.”

Eric Célérier
எழுத்தாளர்