வெளியீட்டு தேதி 21 டிசம்பர் 2023

கிருபை என்பதை ஒரு நபராக இங்கு காண்போம்

வெளியீட்டு தேதி 21 டிசம்பர் 2023

இயேசுவின் சீஷர்களாகிய நமக்கு இந்த கிறிஸ்துமஸ் காலம், தேவனுடைய கிருபையையும், இரக்கத்தையும்  ஒவ்வொரு நாள் காலையிலும் புதிதாகக் கொண்டாடுவதற்கு ஒரு அரிய வாய்ப்பாகும். இந்தப் பாடல் வரிகள் விவரிப்பது போலவே, கிறிஸ்துமஸ் காலம் இருப்பதைக் காணலாம்…

"ஒப்பில்லா - திரு இரா!

இதில் தான் மா பிதா

ஏக மைந்தனை லோகத்துக்கு

மீட்பராக அனுப்பினது

அன்பின் அதிசயமாம்

அன்பின் அதிசயமாம்.

 

ஒப்பில்லா - திரு இரா!

யாவையும் ஆளும் மா

தெய்வ மைந்தனார் பாவிகளை

மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை

எத்தனை தாழ்த்துகிறார்;

எத்தனை தாழ்த்துகிறார்;

 

ஒப்பில்லா - திரு இரா!

ஜென்மித்தார் மேசியா;

தெய்வ தூதரின் சேனைகளை

நாமும் சேர்ந்து, பராபரனை

பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்

பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.”  

கிறிஸ்துமஸின்  அதிசயம் தேவன் மனிதனாகப் பிறந்தார் என்பதுதான்! சற்று வித்தியாசமான இந்த நிகழ்வுக்கு அர்த்தம் யாதெனில், தேவன் நிஜத்தில் நம்முடன் சேர தாமே மனிதனாக அவதரித்தார் என்பதாகும்.  இதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள யோவான் 1:14ஐ வாசித்துப் பாரு.

கிறிஸ்துமஸ் என்பது ஒரு பண்டிகை மட்டுமே அல்ல. கிறிஸ்துமஸ் என்பது  தத்துவம், உபதேசம் அல்லது இறையியலின் கொண்டாட்டமும் அல்ல.

கிறிஸ்துமஸ் என்பது ஒரு நபரைப் பற்றியது

கிருபை என்பது ஒரு நபரைப் பற்றியது 

சத்தியம் என்பது ஒரு நபரைப் பற்றியது 

வழி என்பது ஒரு நபரைப் பற்றியது 

ஜீவன் என்பது ஒரு நபரைப் பற்றியது 

இயேசு என்ற நபரில், நம் பிதாவாகிய தேவனின் எல்லையற்ற அன்பு நமக்குக் கிடைப்பதை நாம் காண்கிறோம். வேதாகமத்தைப் படிப்பது மகத்தானது, இறையியலை ஆராய்வது அற்புதமானது, மேலும் வசனங்களை இருதயத்தில் பதியவைக்க மனனம் செய்து வசனங்களை அறிந்துகொள்வது மிகவும் உதவியாக இருக்கலாம்.  ஆனால் இது ஒருபோதும் இயேசு என்ற நபரின் ஆவிக்குரிய இரகசியத்துக்கு மாற்றாக இருக்க இயலாது, இயேசுவே தேவனின் வார்த்தையாகியவர், வார்த்தை மாம்சமாகி நம்மிடையே வந்தவர்.

தேவன் நமக்கு ஒரு உபதேசத்தைக் கொடுக்க வரவில்லை... அவர் தன்னையே ஒப்புக்கொடுக்க  நேரில் வந்தார்! அவர் மனுவுருவான அன்பு, அவர் தான் உன் இரட்சகர்.

நாம் ஒன்றாக சேர்ந்து துதித்து அவரை மகிமைப்படுத்துவோம்!

Eric Célérier
எழுத்தாளர்