• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 25 டிசம்பர் 2022

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்❤️

வெளியீட்டு தேதி 25 டிசம்பர் 2022

இந்த வாழ்த்தை நீங்கள் இதற்கு முன்பு கேட்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறன். ஆனால் இந்த வாழ்த்துக்கு என்ன அர்த்தம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த வாழ்த்தை "மகிழ்ச்சியான விடுமுறை" (Happy Holidays) அல்லது X-Mas என்று மாற்ற போராடும் சில மதச்சார்பின்மைவாதிகளின் முயற்சிகளை பற்றி கேள்விப்படுவது எனக்கு மிகவும் வேடிக்கையாய் உள்ளது.

சரி, இவ்விரண்டு வாக்கியங்களையும் பிரித்தெடுத்து பார்ப்போம், பின்பு எது உங்கள் விசுவாசத்தையும் வழக்கங்களையும் பிரதிபலிக்கிறது என்று பார்ப்போம். கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையை இரண்டாக பிரிக்கலாம்: "கிறிஸ்து" என்றால் மேசியா அல்லது "அபிஷேகம் பெற்றவர்" என்று பொருள். "மஸ்" என்பது ஆங்கிலத்தில் "mass" என்பதன் சுருக்கம். இது நற்கருணைக் கொண்டாட்டம், அல்லது ஒரு கூடுகையின்போது அல்லது புளிப்பற்ற அப்பப் பண்டிகையின்போது சொல்லும் முடிவு உரை. ஆக, கிறிஸ்துமஸ் என்பதன் பொருளை நாம் எளிதாக இவ்வாறென்று சொல்லலாம், "அபிஷேகம் செய்யப்பட்ட மேசியாவின் பிறப்பின் கொண்டாட்டத்தின் போது நீங்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்புடனும் இருங்கள்".

இது லூக்கா நற்செய்தி 1:14ஐ போல் தோன்றுகிறது, "உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்."

"மகிழ்ச்சியான விடுமுறை" (Happy Holidays) என்பதன் பொருள், "விடுமுறையின் போது மகிழ்ச்சியாய் இருங்கள்" என்பது மட்டுமே. X-mas என்பதன் பொருளையும் நீங்கள் இப்போது உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய பார்வையில் இதில் கிறிஸ்து என்ற வார்த்தைக்கு பதில் "X" உள்ளதால் அதற்க்கு பொருள் "கிறிஸ்து இல்லாத கொண்டாட்டம்".

நம்முடைய சமூதாயத்தைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நீங்களும் நானும் முழுமனதோடு "கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்" என்பதையே தேர்ந்து கொண்டு அதை அர்த்தத்துடன் பகிர்ந்துக் கொள்வோம் என்று நம்புகிறேன். நாம் விரும்புவதென்னவென்றால் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியில் மூழ்க வேண்டும், ஏனென்றால் உலகத்தின் மேசியா நம் தவறுகள், பாவங்கள், நம்மை மற்றும் தீயவனின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்ற அனுப்பப்பட்டார். வேதாகமம் இதை மிகவும் அழகாக சொல்கிறது, "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்." (யோவான் 3:16)

உங்கள் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியாகவும், வளமாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நீங்கள் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும்போது அவருடைய பிரசன்னத்தை உங்கள் அருகில் உணர்வீர்கள் என்று ஜெபிக்கிறேன். இந்த கிறிஸ்துமஸ் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், உங்கள் நண்பர்களுக்கும் மிகவும் முழுமையானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அரசாங்கம் நம்மைக் காப்பாற்றாது, பணம் நம்மைக் காப்பாற்றாது, அதிகாரம் நம்மைக் காப்பாற்றாது. ஆனால் இயேசுவிடம் திரும்பியவர்கள் வெட்கபட்டுபோவதில்லை.

இந்த கிறிஸ்துமஸ் கிறிஸ்துவை கொண்டாடும் ஒரு பெரிய கொண்டாட்டமாக இருக்கட்டும், மேலும் ஆண்டவர் உங்களை எல்லா தீமைக்கும் சோதனைகளுக்கும் விலக்கி காப்பாற்றுவாராக.

ஏனென்றால் நீங்கள் ஒரு அற்புதம்!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.