• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 16 டிசம்பர் 2024

கிறிஸ்துமஸ் விருந்து அழைப்பு 💌

வெளியீட்டு தேதி 16 டிசம்பர் 2024

நாம் டிசம்பர் மாதத்தின் இரண்டாம் பாதியின் துவக்கத்தில் இருக்கிறோம், கிறிஸ்துமஸ் நெருங்குகிறது என்பதை இனி மறுக்க முடியாது! 🎄 நீ உற்சாகமாக இருக்கிறாயா?

நாம் மிகவும் அலுவலாக இருக்கும் காலகட்டம்தான் இந்தக் கிறிஸ்துமஸ் காலகட்டம் - வேலை அல்லது பள்ளித் திட்டங்களை செய்து முடிப்பது, திருச்சபை நிகழ்வுகளில் கலந்துகொள்வது, குடும்பக் கூடுகைகளைத் திட்டமிடுவது மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொருட்கள் மற்றும் புத்தாடைகளை வாங்கச் செல்வது என நாம் மிகவும் அலுவலாக இருக்கலாம்.

ஆனால் இத்தனை அலுவல் மிகுந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில், இந்தக் காலகட்டம் உண்மையில் எதைக் குறிக்கிறது என்பதை மறந்துபோவதற்கான சாத்தியம் உண்டு. 

நாம் அட்வென்ட் நாட்களின் மத்திய பகுதியில் இருக்கிறோம், அட்வென்ட் என்பது கிறிஸ்துமஸுக்கு நான்கு வாரங்கள் முன்னோக்கி உள்ள தினமாகும். அட்வென்ட் என்பதன் அர்த்தம் "வருகை" என்பதாகும், அதாவது, இது ஒரு குழந்தையின் வருகையை எதிர்பார்ப்பது போன்ற ஒரு எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நேரமாகும். 2024 ஆண்டுகளுக்கு முன்பு முதல் கிறிஸ்துமஸ் தினம் அன்று, ​குழந்தை இயேசுவின் பிறப்பாகிய, நமது இரட்சகரின் வருகைக்காக உலகம் காத்துக்கொண்டிருந்தபோது, உண்மையில் ஒரு வருகையை எதிர்பார்ப்பதாகத்தான் இருந்தது. இந்த சம்பவத்தை மத்தேயு 1:18-25 வரையுள்ள வசனங்களில்  நீ வாசிக்கலாம். 

அன்பரே, இந்த ஆண்டு நீ பல கிறிஸ்துமஸ் விழாக்கள் மற்றும் கூட்டங்களில் கலந்துகொண்டு மகிழ்வாய் என்று நம்புகிறேன். ஆனால் ஒரு காரியத்தை நினைவில்கொள், உனக்கு மிக முக்கியமான கிறிஸ்துமஸ் அழைப்பிதழ் இயேசுவிடமிருந்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில் இயேசுவுக்காகக் காத்திருக்க அவர் உன்னை அழைக்கிறார்.

அலுவல் மிகுந்த பருவத்தில் ஒரு காரியத்துக்காக அல்லது ஒரு நபருக்காகக் காத்திருப்பது என்பது மிகவும் கடினம். ஆனால் வேதாகமம் இவ்வாறு வாக்களிக்கிறது:

"தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்."  – புலம்பல் 3:25 

எனவே அன்பரே, நாம் ஒன்றாக இணைந்து காத்திருக்கும் காலகட்டத்துக்குள் பிரவேசிப்போம்.

நாம் ஜெபிப்போம்: “ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்க என்னை அழைத்ததற்கு நன்றி. இந்தக் காலகட்டத்துக்கு நீர்தான் காரணம் என்பதை நினைவில்கொள்ள எனக்கு உதவுவீராக, மரியாளைப் போலவே, என் வாழ்க்கையில் உமது வருகைக்காகக் காத்திருக்க எனக்குக் கற்றுத்தாரும்.”

காத்திரு... நீ ஒரு அதிசயம்!

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.