வெளியீட்டு தேதி 12 பிப்ரவரி 2023

அன்பரே, கிறிஸ்துவை எழும்பப்பண்ணின வல்லமை உனக்குக்குள் இருக்கிறது!

வெளியீட்டு தேதி 12 பிப்ரவரி 2023

இன்று, குறிப்பாக, கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களை நான் ஊக்குவிக்க விரும்புகிறேன். ஒருவேளை அது  நீயாகக் கூட இருக்கலாம், அன்பரே?

நீ பரிதாபமான நிலையில் இருக்கிறாய் என்றும், எல்லாம் முடிந்துவிட்டது, பாதையின் முடிவில் எந்த வெளிச்சமும் இல்லை என்றும் பிசாசு உனக்குச் சொல்ல முயன்றாலும் கூட, பிசாசு உன்னை நம்ப வைக்க விரும்புவது போல் நிலைமை அவ்வளவு பயங்கரமானதாக இல்லவே இல்லை! மறந்துவிடாதே... அவன் ஒரு பொய்யன்!

நீ அனுபவிக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்பும் அபரிவிதமான வாழ்க்கையை நீ வாழ்வதிலிருந்து உன்னைத் தடுக்க, எதிரியானவன் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் தற்காலிக உணர்ச்சிகளைத் தான் நீ உணர்கிறாய்.

இதைப் பற்றி யோசித்துப் பார் - கிறிஸ்து ஜீவனுடன் இருப்பதால் உன் விசுவாசமும் உயிருள்ளதாய் இருக்கிறது. அவர் உயிர்த்தெழுந்தார்! ஆகவே உனது விசுவாசமும் உயிர்த்தெழுதலை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பிய வல்லமை உனக்குள் இருக்கிறது, அது உன்னுடைய எல்லாவிதமான குழப்பமான உணர்ச்சிகளுக்கும் பிரச்சனைகளுக்கும் மேலாக உன்னை உயர்த்தி, முன்பை விட சிறந்த இடத்தில் உன்னை நிலைநிறுத்தும்!

Eric Célérier
எழுத்தாளர்