சிக்கன் கிரேவியின் ரகசிய மசாலா
நேற்று நாங்கள் சொன்னவைகளை, இன்று இன்னும் உனக்குத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறோம், நீ என்னுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்! இந்த தினசரி மின்னஞ்சல்களின் இதயமான ‘அதிசயம்’ என்ற கருத்தை இன்று, நாம் ஆழமாக ஆராயலாம்.
இயேசு செய்ததைப்போல ஒரு அதிசயம் பெரியதாக இருந்தாலும் சரி, அல்லது நமது மின்னஞ்சல்களைப் போல சிறியதாக இருந்தாலும் சரி, ஒரு அதிசயத்தின் வரையறை என்பது 'ஆண்டவரிடமிருந்து கிடைக்கும் ஒரு அசாதாரண நிகழ்வு மற்றும் வரவேற்கத்தக்க நிகழ்வு'. எங்கள் மின்னஞ்சல்கள் இப்படித்தான் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்:
- அசாதாரணமானவை: அவை ஆண்டவருடனான உன் உறவை மாற்றியமைத்து வலுவாக்கும் விதத்தில் அசாதாரணமானவையாக இருக்கும், அவருடைய வார்த்தையிலிருந்து புதிய வெளிப்பாடுகளைக் கொண்டுவரும், மேலும் ஒவ்வொரு நாளும் நீ கிறிஸ்துவைப்போல வளர உனக்கு உதவும்.
- வரவேற்பு: நாம் இப்போது கிறிஸ்துவுக்குள் ஒரே குடும்பமாக இருக்கிறோம் மற்றும் ஒரு உறவினரின் இதயப்பூர்வமான செய்தி எப்போதும் வரவேற்கத்தக்க விதத்தில் மகிழ்ச்சியளிப்பதாய் இருக்கும், அப்படித்தானே?
- ஆண்டவருக்கு சமர்ப்பித்தல்: பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு, ஆண்டவர் எங்கள் இதயங்களில் வைக்கும் வார்த்தைகளை அவருடைய பரிசுத்த வார்த்தையான வேதாகமத்தை அடிப்படையாகக்கொண்டு, நாங்கள் எழுதுகிறோம்.
ஒரு அதிசயத்தின் உண்மையான வல்லமை செயலிலோ அல்லது நிகழ்விலோ அல்ல, மாறாக அது ஆண்டவருக்குக் கொடுக்கும் மகிமையில்தான் உள்ளது.
“நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.” (எபேசியர் : 3: 20-21)
"கோழி இல்லாத கோழிக் குழம்பு வெறும் குழம்பு" என்று என் மாமனார் எப்பொழுதும் சொல்வார். அதேபோல், ஆண்டவருக்கு மகிமையைக் கொண்டுவராத அதிசயம் வெறும் நிகழ்ச்சிதான்.
அன்பரே, எங்கள் மின்னஞ்சல்களில் பிரதானமாக இயேசுவை மாத்திரம் மையமாக வைத்திருப்பதற்கும், நாங்கள் எழுதும் எல்லா வார்த்தைகள் மூலமும் அவரை மகிமைப்படுத்துவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். “துதிப்போம் அல்லேலூயா பாடி” என்ற ஒரு துதிப் பாடலைப் பாடி ஆண்டவரை மகிமைப்படுத்துவதன் மூலம் இந்த நாளை நாம் தொடங்குவோம்.
