சிறந்த மெய்க்காப்பாளர்…
பொதுவெளியில் பிரபலங்கள் அல்லது அரசியல்வாதிகள் செல்லும்போது, அவர்கள் மெய்க்காப்பாளர்களால் சூழப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இந்த நபர்கள் முக்கியமானவர்களாகக் கருதப்படுவதால், அவர்களின் பாதுகாப்பு அவசியம் என்று தீர்மானிக்கப்படுகிறது, மேலும் அவர்கள் இந்த "மெய்க்காப்பாளர்களை" தங்களுக்குப் பாதுகாவலர்களாக நியமிக்கிறார்கள்.
அன்பரே, நீ முக்கியமான நபர். பல தேவதூதர்களின் கண்காணிப்பில், உன் பாதுகாப்பு அவசியம். உன்னை எப்படியும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, அதிக விலைக்கிரயம் செலுத்தப்பட்டுள்ளது. உன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஆண்டவரே அதைப் பார்த்துக்கொள்கிறார்...!
ஆம், ஆண்டவரே உன் மெய்க்காப்பாளராய் இருக்கிறார்!
இந்தக் கருத்து உனக்கு வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால் தம்முடைய வார்த்தையில், ஆண்டவர் தமது பிள்ளைகளுக்கு இவ்வாறு வாக்களிக்கிறார், “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.’’ (ஏசாயா 41:10)
அன்பரே, ஆண்டவர் உன்னோடு கூட இருக்கிறார். அவருடைய கண்கள் தொடர்ந்து உன் மீதே வைக்கப்பட்டிருக்கும். நீ சற்று அப்புறம் நகர்ந்தாலும் கூட, அவர் உன்னைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார். நீ சமாதானமாக வாழலாம்... ஒவ்வொரு தருணத்திலும் உன் பாதுகாப்பை உறுதி செய்ய ஆண்டவர் தாமே முன்வருகிறார்.
உன்னையும் உன் குடும்பத்தையும் பாதுகாப்பதற்காக என்னுடன் சேர்ந்து ஆண்டவரைத் துதி!
