• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 19 செப்டெம்பர் 2023

அன்பரே, சோலைகளில் உள்ள நீர் எங்கிருந்து வருகிறது?

வெளியீட்டு தேதி 19 செப்டெம்பர் 2023

சோலைகள் பாலைவனங்களில் காணப்படுகின்றன. ஆனால் அவற்றில் உள்ள நீர் உண்மையிலேயே எங்கிருந்து வருகிறது என்று நீ எப்போதாவது கேட்டிருக்கிறாயா? இந்த நீர்நிலைகள் இயற்கை நிலத்தடி நீரூற்றுகள் அல்லது மனிதர்களால் தோண்டப்பட்ட கிணறுகள் மூலம் தண்ணீரால் நிறைகின்றன. ஊற்றுக்கான மூலாதாரம் வற்றிப்போகையில் சோலை மறைந்துவிடும்.

சோலையானது அதன் சுற்றுப்புறங்களால் மிகவும் பாராட்டப்படுகிறது ஏனென்றால் சோலையானது அது இருக்கும் சுற்றுப்புறத்தைக் காணக்கூடியதாகவும், இன்றியமையாததாகவும், கவர்ச்சிகரமானதாகவும் ஆக்குகிறது. பாலைவனத்தின் மத்தியில், அங்கே சென்று தாகத்தைத் தணித்துக்கொள்ள யார்தான் மறுப்பு தெரிவிப்பார்கள்? 

அன்பரே, நீ இந்த இடத்திற்குத் தற்செயலாக வந்துவிடவில்லை. நீதான் இந்த சோலை, தேவனுடைய பிரசன்னம்தான் உன் ஊற்று! வேதாகமம் உன்னைப் பற்றி இவ்வாறு கூறுகிறது...

“கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்." (ஏசாயா 58:11ஐப் பார்க்கவும்). 

உன் சகாக்கள், நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் இன்று வறண்டுபோயிருக்கும், பாலைவனம் போன்ற சூழ்நிலையில் தாங்கள் இருப்பதாக உணரலாம். பாலைவனத்தில் உள்ள ஒரு சோலையைப்போல, இந்த ஜனங்களது வாழ்விற்கு உன்னை ஆசீர்வாதமாக மாற்றி, தம்முடைய ஜீவனால் உன்னை நிரப்புபவர் ஆண்டவர் ஒருவரே ஆவார்!

 ஆண்டவருடனான உன் உறவையும், அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கும் ஆவிக்குரிய காதுகளையும் வளர்த்துக்கொள். அவருடைய வார்த்தையை ஆழமாகத் தியானித்து, அவருடைய அன்பில் நீ மூழ்கியிரு. 

சமாதானத்தின் மீதும் சத்தியத்தின் மீதும் தாகமாய் இருப்பவர்கள் உன்னிடம் நெருங்கி வருவார்கள், பின்னர் நீ அவர்களிடம் அன்பின் ஆண்டவரைப் பற்றியும், ஒருபோதும் வற்றிப்போகாத ஜீவனின் ஆதாரத்தைப் பற்றியும் பேசலாம்!

என்னுடன் சேர்ந்து ஜெபிக்க உன்னை அழைக்கிறேன்... “ஆண்டவரே, உமது சத்தத்தையும் உமது பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலையும் புரிந்துகொள்ள என்னை அதிக உணர்வுள்ளவனாக / உணர்வுள்ளவளாக மாற்றுவீராக. நான் உம்மாலும், உமது அன்பினாலும், உமது கிருபையினாலும் நிரப்பப்படும்படிக்கு உமது ஜீவன் ஒவ்வொரு நாளும் எனக்குள் பாய்ந்து வருவதாக. என்னைச் சுற்றியுள்ளவர்கள் அனைவருக்கும் நான் ஆசீர்வாதமாக இருக்கத் தீர்மானிக்கிறேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.