• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • ID Bahasa
    • IT Italian
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
வெளியீட்டு தேதி 20 ஆகஸ்ட் 2024

சில நேரங்களில் நீ இலக்கைத் தவறிவிட்டதாக உணர்கிறாயா?

வெளியீட்டு தேதி 20 ஆகஸ்ட் 2024

சில சமயங்களில் இயேசுவின் சீஷனாக நான் எப்படி இருக்க வேண்டும் என்ற  "கோரிக்கைகளை" பூர்த்திசெய்ய இயலாதவனாக இருக்கிறேன், நீயும் என்னைப்போல் இருக்கிறாயா... எனக்குத் தெரியவில்லை. ஒரு விசேஷ அபிஷேகத்தைப் பெற்ற ஒரு போதகருடன் நான் என்னை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவரைப் போன்றதொரு ஊழியத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நான் பிரயோஜனம் அற்றவன் என்றே உணர்கிறேன்.

இயேசுவின் சீஷர்களும்கூட, சில சமயங்களில் “இலக்கை தவறவிட்டதை” நீ எப்போதாவது கவனித்ததுண்டா?

பல நேரங்களில், தங்களுக்குள் யார் "பெரியவன்" என்று சீஷர்கள் சண்டையிட்டனர். இயேசு விரைவில் மரிக்கப்போகிறார் என்பதை அறிந்திருந்தும், அவருக்காக ஜெபித்து, ஆதரவளிக்காமல் அவர்கள்  அனைவரும் தூங்கிவிட்டனர். பேதுரு இயேசுவை மூன்று தரம் மறுதலித்தார். இருந்தபோதிலும், இயேசு அவரை நம்பி, தமது திருச்சபையைப் பராமரிக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்புக்கொடுத்தார்.

மனுஷீக முறைப்படி சொல்லப்போனால் சீஷன் ஒருபோதும் பூரணமானவன் அல்ல.

இயேசுவின் சீஷர்களது மகிமை மற்றும் அவர்களது ஆவிக்குரிய தருணங்களை மட்டும் சுவிசேஷங்களில் பதிவு செய்வதில் ஆண்டவர் திருப்தியடையவில்லை... அவர்களின் தோல்விகளையும் அவர் வெளிப்படுத்தினார். ஆகவேதான் 2,000 ஆண்டுகளுக்குப் பிறகும், நாம்,  "நானும் அப்படித்தான், நானும் தோற்றுப்போனேன்! நான் மிகவும் பெருமையுள்ள நபராய் இருந்தேன், ஆனால் என்னையும் என் பரலோகப் பிதா நேசிக்கிறார், ஏற்றுக்கொண்டார் மற்றும் அங்கீகரித்திருக்கிறார்" என்று சொல்லலாம்.

நல்ல செய்தி என்னவென்றால், அவருடைய அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது என்பதுதான். வேதாகமம் சொல்கிறது:

"... தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்."  (யோவான் 13:1)  

அன்பரே, இன்று நீ உன் நம்பிக்கையை இழக்காதே. உன் எல்லா குறைபாடுகளின் மத்தியிலும், ஆண்டவர் உன்னை முன்புபோலவே நம்புகிறார். உன் பலவீனத்தின்போது அவர் தம்மை வெளிப்படுத்துகிறார்.

இன்று இந்த சத்தியம் உன்னை ஆசீர்வதித்து, உனக்கு ஆறுதலளிக்குமாறு நான் ஜெபிக்கிறேன்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நான் உங்களது மின்னஞ்சல்களைப் பெறுவதை விரும்புகிறேன். அதில் உள்ள வார்த்தைகள் மிகவும் ஞானமிக்க, சத்தியமுள்ள வார்த்தைகள். நான் பலவீனமாக இருந்தேன், ஒவ்வொரு முறையும் ஆண்டவர் இந்த வார்த்தைகள் மூலம் என்னைப் பலப்படுத்தினார்.  இப்போது நான் முன்பை விட பெலத்துடன் இருக்கிறேன். பலவீனமான தருணங்களில் ஆண்டவர் என்னை பலப்படுத்துகிறார். ஆண்டவர் தமது நிபந்தனையற்ற அன்பை என் மீது பொழிகிறார். நான் அவரை நேசித்து ஒவ்வொரு நாளும் அவருடன் நெருக்கமாக வளர்ந்து வருகிறேன். தங்களது மின்னஞ்சலுக்கு நன்றி. இது எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து, தினந்தோறும் என் வாழ்வில் நடப்பவைகளைப் பற்றிப் பேசுகிறது. ஒவ்வொரு நாளும் இந்த வார்த்தைகள் என்னுள் சிறப்பாக கிரியை செய்கிறது.” (ஜெனிபர், கம்பம்.)

Eric Célérier
எழுத்தாளர்