ஜெபம் ஒரு வல்லமை வாய்ந்த ஆயுதம்!
கர்த்தருடைய ஜெபத்தில், இயேசு தம்முடைய சீஷர்களுக்கு ஜெபத்தைக் கற்பித்தபோது, "உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக" என்று கற்பித்தார் (மத்தேயு 6:10). பரலோகத்தில் தேவனுடைய சித்தம் நிறைவேற்றப்படுவதுபோல, பூமியிலும் அவருடைய சித்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். இருப்பினும், இங்கு பூமியில் தேவனுடைய சித்தத்துக்கு பெரும்பாலும், நாம் அனைவரும் முன்னுரிமை அளிப்பதில்லை என்பதை பார்க்கிறோம்.
"பரலோகத்தை நமது முன்மாதிரியாக வைத்து, ஒவ்வொரு விசுவாசியும் ஒரு ஊழியராக செயல்பட்டு, பூமியில் உள்ள பிரச்சனைகளைக் கண்டுபிடித்து சரிசெய்ய நாம் வடிவமைக்கப்பட்டுள்ளோம்." - பில் ஜான்சன்
உன் ஜனங்கள் மத்தியில் நீ எவ்வாறு ஊழியம் செய்து அவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறாய்? ஜெபத்தின் மூலம் ஊழியம் செய்கிறாயா? இது ஒரு வல்லமை வாய்ந்த ஆயுதம். ஆண்டவருடன் தனிமையாக செலவிடும் ஜெப நேரத்தில், நம் நாட்டில் நல்ல கல்வி திட்டங்களுக்காக ஜெபத்தை ஏறெடு, அரசாங்கத் தலைவர்களுக்காகவும், ஊடகங்கள், பொருளாதார அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தில் பணிபுரியும் நபர்களுக்காகவும் ஜெபி. அப்படியே எனக்காகவும் என்னுடன் ஊழியத்தில் இணைந்துள்ள மற்றவர்களுக்காகவும் ஜெபி. அவ்வாறு செய்யும்போது, இந்த ஜெப ஊழியமானது முக்கிய பதவிகளில் விசுவாசிகளையும், அவருடைய பிரதிநிதிகளையும் வைக்கும்படி நாம் ஆண்டவரிடம் கேட்பது மட்டுமல்லாமல், அதிகாரம் செலுத்தும் பதவியில் இருப்பவர்கள் எடுக்கும் தீர்மானங்களிலும் நீ தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்!
ஆம், பூமியில் தேவனுடைய சித்தம் நிறைவேற ஜெபம் ஒரு ஆயுதமாக இருக்கிறது, அது நாம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஆயுதமாகும்! ஒரு நேரத்தில் ஒருவராக... ஒவ்வொருவரும் இடைவிடாமல் ஜெபித்து, நாம் ஒன்றாக சேர்ந்து இந்த உலகத்தை மாற்றுவோம்!
பரிசுத்த ஆவியானவர்... கிரியை செய்கிறார்:
"ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச்செய்யும்"
என்ற இந்தப் பாடலைப் பாடி கர்த்தரிடத்தில் விண்ணப்பங்களை ஏறெடுப்பாயாக!
