ஜெபமே ஒவ்வொரு கதவையும் திறக்கும் திறவுகோல்!
இன்று, எரேமியா 29:11-ஐப் பற்றிய வேத பாட தியானத்தை நாம் நிறைவு செய்கிறோம்.
வேதாகமம் கூறுகிறது, "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." (எரேமியா 29:11)
உன் எதிர்காலத்திற்கான திட்டம் ஆண்டவரிடத்தில் உள்ளது. அவருடைய திட்டத்தில் நுழைவதற்கு நீ எடுக்க வேண்டிய முதல் படியே, ஜெபத்தில் அவரை உன்னிடத்துக்கு அழைப்பதாகும்.
வேதாகமத்தில், எரேமியா 29:11ம் வசனத்தைத் தொடர்ந்து வரும் வசனங்களில் ஆண்டவர் இந்த வாக்குத்தத்தத்தை அளிக்கிறார். இந்த வாரம் நாம் கவனம் செலுத்தப்போகும் வசனம் இதுவே:
“அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி, நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (எரேமியா 29:12-14)
உன் எல்லா கஷ்டங்களிலும் நீ ஆண்டவரை அழைக்கலாம், ஏனென்றால் அவர் உனக்குச் செவிசாய்ப்பார். உன் நிலைமையை கவனித்துக்கொள்ள அவருக்கு இடங்கொடு!
பொதுவாகவே, நாம் வெறுமையையும் தனிமையையும் வெறுக்கிறோம். எனவே உன் பிரச்சனைகளை ஆண்டவரிடத்தில் விட்டுவிடு, பிறகு விடாமுயற்சியுடன் அவருடைய சமூகத்தை தேடு. உனக்கு சாத்தியமற்றதாக தோன்றும் விஷயங்கள் யாவற்றையும், நம்பிக்கையற்ற உன் எல்லா சூழ்நிலைகளையும் அவருடைய ஆவி நிரப்பும்.
இதோ அவருடைய வாக்குத்தத்தம்: கர்த்தரைத் தேடுகிறவன் அவரைக் கண்டடைகிறான். அவர் உன்னிடமிருந்து வெகு தொலைவில் இல்லை! நீ அவரைத் தேட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நீ தட்டும்போது, அவர் கதவைத் திறக்கிறார். ஏனென்றால், உன் எதிர்காலத்திற்கான கதவு உட்பட ஒவ்வொரு கதவையும் திறக்கும் திறவுகோல் உன் ஜெபமாகும்.
ஆம், அன்பரே, ஆண்டவர் உனக்காக வைத்திருக்கும் திட்டங்களை அவர் அறிவார். அவர் வாழ்க்கையில் சமாதானம் மற்றும் வெற்றி நிறைந்த ஒரு எதிர்காலத்தை உனக்கு உருவாக்கியுள்ளார். இன்று அவரிடத்துக்கு நெருங்கி வா, அவர் உன்னிடத்துக்கு நெருங்கி வருவார். நீ எளிதாய் செயல்பட உன் பங்கும் இருக்கிறது, மேலும் அவர் உனக்கு அதை வாக்குப்பண்ணியுள்ளார். இது அசாதாரணமானது!
