தொடர்ந்து நீந்து, நீந்திக்கொண்டே இரு 🐠
"நீமோவைத் தேடுதல்" என்ற கதையைக் கேட்டிருக்கிறாயா?
தொலைந்துபோன தன் மகனான நெமோவைக் கண்டுபிடிக்க சாகசப் பயணத்தைத் தொடங்கும் மார்லின் என்ற மீனின் இதயத்தைத் தூண்டும் கதைதான் இது. வழியில், அது நினைவாற்றல் இழப்புதன்மை கொண்டதும் நம்பத்தக்கதுமான டோரி என்ற ஒரு மீனுடன் நட்புக்கொள்கிறது. குறிப்பாக மனச்சோர்வடைந்த ஒரு தருணத்தில், டோரி மார்லினை ஊக்கப்படுத்தியது, "வாழ்க்கை உன்னை விழப்பண்ணும்போது, நீ என்ன செய்ய வேண்டும் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டு, "நீச்சலடித்துக் கொண்டே இரு, நீந்திக்கொண்டே இரு, நீச்சல் அடி, நீந்து" என்று பாடல் பாடி உற்சாகப்படுத்தியது.
நீமோவைக் கண்டுபிடித்தலின் இந்தக் காட்சி எனக்கு பிலிப்பியர் 3வது அத்தியாயத்தை ஞாபகப்படுத்துகிறது. இந்த அத்தியாயத்தில், பவுல் ஆண்டவருடைய மகிமையைப் பின்தொடர்வதற்கும், இயேசுவை அறிந்துகொள்வதற்கும், அவரைப் போல மாறுவதற்கும், தான் ஒரு காலத்தில் நேசித்த அனைத்தையும் - அதாவது, தனது சாதனைகள், நீதியான செயல்கள் மற்றும் பாரம்பரியத்தை - விட்டுவிட்டதைப் பற்றிப் பேசுகிறார்.
"சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி" என்று எழுதுவதன் மூலம் பவுல் தாழ்மையுடன் இதை அறிக்கையிடுகிறார். (வசனம் 13)
இன்றைய நாளின் ‘தேவையானது ஒன்று’: பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடுவதுதான்; அல்லது, டோரியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், "நீந்து, நீச்சல் அடி, நீந்திக்கொண்டே இரு."
"முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்." (ஏசாயா 43:18)
"கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல." (லூக்கா 9:62)
நாம் அனைவரும் சில சமயங்களில் டோரியைப் போலவே இருக்க வேண்டும், கடந்த காலத்தை மறந்து, முன்னோக்கிப் பார்க்க வேண்டும், கிறிஸ்து இயேசுவில் ஆண்டவர் நமக்காக வைத்திருப்பதைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும்.
"நாம் பின்னால் விட்டுச்செல்லும் எதையும் விட, மிக சிறந்த விஷயங்கள் நமக்கு முன்னால் காத்துக்கொண்டிருக்கின்றன" என்று சி.எஸ். லூயிஸ் என்பவர் கூறுகிறார்.
அன்பரே, பவுலின் வார்த்தைகளைப் பற்றிச் சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்குவாயா? உனக்குப் பிடித்த விஷயங்கள் எது என்று சற்று யோசித்துப்பார், அவற்றை விட்டுவிடுமாறு ஆண்டவர் உன்னைப் பார்த்துக் கேட்கிறார். அவற்றை எழுதி, அந்தப் பட்டியலை உன் கையில் எடுத்துக்கொண்டு, ஆண்டவரை பார்த்து சொல், ‘ஆண்டவரே, உமது நிமித்தம் இவற்றை விட்டுவிடுகிறேன். என் கடந்த காலத்தை நான் பற்றிக்கொண்டிருக்க விரும்பவில்லை, அதை உம்மிடம் விட்டுவிடுகிறேன், ஆமென்!’
