வெளியீட்டு தேதி 12 ஜூலை 2024

தயவின் பலன் நிச்சயம் கிடைக்கும்...

வெளியீட்டு தேதி 12 ஜூலை 2024

நீ அன்பாய் இருக்கவும், மற்றவர்களின் நலம் விரும்பியாக இருக்கவும், மற்றவர்களுக்கு நன்மை செய்யவும் விரும்புகிறாயா? அல்லது அதை எப்படிச் செய்வது என்று கற்றுக்கொள்ள விரும்புகிறாயா?

இந்த வார்த்தைக்கான சொல் பிறந்த வகை பற்றி விரைவாகப் பார்ப்போம். "இரக்கமுள்ளவராய் இருத்தல்(benevolent)" என்ற வார்த்தை லத்தீன் மொழியில் "bene volens" என்பதிலிருந்து வந்தது. அதாவது "தானாக முன்வந்து மற்றவர்களின் நலம் விரும்பியாக இருப்பது" என்பதுதான் இதன் அர்த்தமாகும். இரக்கமுள்ளவர்களாய் இருத்தல் மற்றும் தயவுள்ளவர்களாய் இருத்தல் என்பதன் அர்த்தம் மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற விருப்பமாகும். நல்லது செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடனும் நோக்கத்துடனும் இருப்பது, பிறரை ஆசீர்வதிப்பது மற்றும் நம் சமுதாயத்தை ஊக்குவிப்பதாகும்.

பாஸ்டர் ஊழியம் செய்யும் என் நண்பர் ஒருவர், ஒரு நாள் என்னுடன் இதைப் பகிர்ந்துகொண்டார். சில கிறிஸ்தவர்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டும் என்று தங்கள் இதயங்களில் எண்ணினர். அப்படியே, "நீங்கள் செய்யும் நற்காரியங்களுக்காய் நன்றி" மற்றும் "நாங்கள் உங்களைப் பாராட்டுகிறோம்" என்று எழுதி அனுப்பினார். அது அவர்களை மிகவும் தொட்டது. முக்கியமாக காவல்துறைத் தலைவரைத் தொட்டது. காவல் துறையினர் மீதான இந்த அன்பின் வெளிப்பாடு அவருக்குப் புரியவில்லை! அவர், “நாங்கள் ஒவ்வொரு நாளும் அவமதிக்கப்படுகிறோம்." குறிப்பாக நமது சமூகத்தின் சூழலில், "உங்களைப் போன்று ஒருபோதும் மக்கள் எங்களை ஊக்கப்படுத்துவதில்லை" என்று சொன்னார்.

வேதாகமம் கூறுகிறது: "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்." (எபேசியர் 5:9

நற்கிரியைகள் பேசும், மாற்றத்தை ஏற்படுத்தும். இது நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய ஒரு காரியம்தான்! அன்பரே, நீ ஆசீர்வாதத்தின் பாத்திரமாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறாய். இன்று முழுமனதோடு அன்பாக இருப்பதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தயங்காதே!

இன்று நீ என்ன செய்யலாம்?

  • ஆண்டவரைப்போல மற்றவர்களை அன்புடனும் மரியாதையுடனும் நடத்தும்படி அவர் பேசுவதுபோல் நீயும் பேசு...
  • ஆண்டவர் பேசுவதுபோல் எளிமையாகவும் வல்லமையாகவும் பேசு
  • ஆண்டவர் நடப்பதுபோல் பலத்துடனும் உறுதியுடனும் நட
  • ஆண்டவர் நேசிப்பதுபோல் நிபந்தனையின்றி அளவில்லாமல் நேசி.

இது மனிதனால் கூடுமா? இது நிச்சயம் முடியாததுதான்! ஆனால், பரிசுத்த ஆவியானவருடைய உதவியால் அது கூடும். உன் தேவையை அறிந்து, அவர் உன்னை நிரப்புகிறார், உனக்கு வழிகாட்டுகிறார், உன்னோடு பேசுகிறார் மற்றும் உன்னை வழிநடத்துகிறார்.

இங்கே தெய்வீக நிரம்பிவழிதலைக் காணலாம்: நாம் மற்றவர்களுக்கு நற்கிரியைகளைச் செய்யும்போது, நம் சொந்தக் குறிக்கோளுக்குள் நாம் பிரவேசிக்கிறோம்!

நம்மீது ஆண்டவர் பாராட்டும் அற்புதமான தயவை நினைவூட்டும் இந்த அழகான ஆராதனைப் பாடலைக் கேட்டு மகிழ்வோம்.

Eric Célérier
எழுத்தாளர்