தரிசனம் நிச்சயம் நிறைவேறும்!
உனது கிறிஸ்தவ வாழ்க்கைப் பயணத்தில் சில சமயங்களில், உன் பொறுமையை வெளிப்படுத்திக்காட்ட வேண்டும் (தொடர்ந்து நீ வெளிப்படுத்திக் காண்பிக்க வேண்டியிருக்கும்). பொதுவாகவே பொறுமையானது ஆண்டவருடைய திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது என்பதைத்தான் இது மீண்டும் நமக்கு உறுதிப்படுத்துகிறது.
வேதாகமம் என்ன சொல்கிறது என்பதை நாம் வாசித்து அறிந்துகொள்வோம்: “குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; ... அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை." (ஆபகூக் 2:3)
ஆண்டவர் முன்கூட்டியே நமக்குத் தெரியப்படுத்துகிறார்: உன் வாழ்க்கையில் அவர் திட்டமிட்டது நிறைவேற சிறிது காலம் ஆகலாம்.
மோசேயும் இதை தன் வாழ்வில் அனுபவித்தார்; எபிரெயர் நிருபம் நமக்குச் சொல்வது இதுதான்: "விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ...." (எபிரெயர் 11:27) மற்ற பதிப்புகள் அவர் பொறுமையுடன் காத்திருந்து, விடாமுயற்சியுடன், தொடர்ந்து சென்றதாகக் கூறுகின்றன! அன்பரே... நீ இதுபோன்ற காத்திருப்பின் காலத்தில் இருப்பாயானால், விடாமுயற்சியுடன் இரு! உறுதியாய் நிலைத்திரு!
உன் தரிசனம் நிறைவேறத் தாமதமாகிறதா? ஆண்டவருடைய வாக்குத்தத்தம் வெளிப்பட நீண்ட காலம் நீ காத்துக்கொண்டிருக்கிறாயா? உன் கண்களை தொடர்ந்து இயேசுவின் மீது வைத்துவிடு. உன்னைச் சுற்றியுள்ள அனைத்து சூழலும், உன் வாழ்க்கையில் ஆண்டவர் இருப்பதையும் அவர் கிரியை செய்வதையும் சந்தேகிக்கச் செய்தாலும், அன்பரே... காணப்படாத அவரையே நீ நோக்கிப் பார்க்கும்போது, எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள இயேசு உனக்கு உதவுவார்.
இன்றே இதை உறுதியாகப் பற்றிக்கொள்:
- காணப்படாத உலகில் இயேசு உனக்காக கிரியை செய்கிறார்.
- தரிசனம் நிறைவேறும் காலம் வந்துகொண்டிருக்கிறது.
- நிச்சயமாக அது நிறைவேறும்!
அன்பரே, கர்த்தர்தாமே இன்று உன்னை ஆசீர்வதிப்பாராக!
