தோல்வியே கற்றுக்கொள்வதற்குச் சரியான வழி
எல்லாவற்றிலும் நாம் தோற்றுவிட்டோமோ என்று யோசிக்கும் நாட்கள் உண்டு... நம்மைப் பற்றி நாம் நினைக்கும்போது, அது பெருமைக்குரியதாக இல்லை. இப்படி நாம் யோசிக்கும்போது, மீண்டும் ஒருமுறை குழப்பமடைந்து தடுமாறுகிறோம்.
இருப்பினும், நாம் தோல்வியாகப் பார்ப்பது கற்றலின் ஒரு பகுதியாகவும், நடைமுறையின் ஒரு பகுதியாகவும் கருதப்படலாம் அல்லவா! மின்விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் எடிசன் என்பவர் ஒருமுறை, “நான் தோல்வியடையவில்லை. வேலையில் தோற்றுப்போகக் கூடிய 10,000 வழிகளை நான் கண்டுபிடித்துள்ளேன்" என்று சொன்னார். என்ன ஒரு தன்னம்பிக்கை! தோல்விக்கு வழிவகுத்த 10,000 முயற்சிகளை அவர் பார்க்கவில்லை... வேலை செய்யக்கூடியதை நெருங்குவதற்கான வாய்ப்புகளை மட்டுமே பார்த்தார்! “வெளிச்சம் உண்டாகக்கடவது!” என்ற வேதாகம வசனத்தை அவர் உண்மையாக நம்பியிருக்க வேண்டும். ;-) இன்று இரண்டு விஷயங்களை நாம் தியானிப்போம்:
- நீ வளர்ச்சி அடைவதற்கும், மாறுவதற்குமான செயல்பாட்டில் இருக்கிறாய் என்பதை ஆண்டவர் நன்கு அறிவார். இதை நீயும் நம்பு, மேலும் உன் "தோல்விகளுக்கு" உன்னை நீயே குற்றப்படுத்திக்கொள்ள வேண்டாம். அது நீ கற்றுக்கொள்வதற்கும் வளருவதற்கும் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.
- வேதாகமத்தில் எரேமியா 29:11-ல் நாம் வாசிக்கிறபடி, சமாதானம் மற்றும் மகிழ்ச்சிக்கான திட்டங்களை மட்டுமே ஆண்டவர் வைத்திருக்கிறார். அவை நல்ல திட்டங்கள்: “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே."
கண்ணுக்குத் தெரியும் தோல்வியில் கவனம் செலுத்த வேண்டாம். அன்பரே, ஆண்டவர் உனக்கும் உனக்குள்ளும் என்ன செய்ய விரும்புகிறார் என்பதில் மாத்திரம் கவனம் செலுத்து!
நீ அந்த செயல்பாட்டின் பாதையில்தான் இருக்கிறாய் என்பதை நினைவில்கொள்... அவை யாதெனில், ஒவ்வொரு நாளும் மாற்றமடைதல், கற்றல் மற்றும் வடிவமைத்தல் ஆகிய இவைகளின் அன்றாட செயல்பாடே ஆகும்.
அன்பரே, நீ ஆண்டவரோடு இருக்கும்போது, உன் தோல்விகள் மூலம் கற்றுக்கொள்ளவும், முன்னேறவும், வளரவும் வாய்ப்புகள் உள்ளன!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: "'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சலானது என் வாழ்க்கையின் மிகவும் கடினமான காலகட்டங்களின் ஒரு சமயத்தில் எனக்கு உதவியது. நம்பிக்கையையும் ஆண்டவருடைய மாறாத அன்பையும் பார்க்க இது எனக்கு உதவியது.” (டேவிட்)
