• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 29 மே 2024

தாழ்மை குணத்துக்கான உனது முன்மாதிரி யார்?

வெளியீட்டு தேதி 29 மே 2024

இயேசுவின் குணநலன்கள் எண்ணிலடங்காதவை. உதாரணமாக, அவரது அன்பு ஈடு இணையற்றது. அந்த அன்பு நம்மால் அடைய முடியாத ஒன்றாக நமக்குத் தோன்றலாம், ஆனால் அது நம் அன்றாட வாழ்வில் நமக்கு மிக அருகிலும் நம்மால் "உணரக்கூடியதாகவும்" இருக்கிறது.

குறிப்பாக, அவருடைய மற்றுமொரு விசேஷித்த குணமான இது என்னை மிகவும் தொட்டது, அதுதான் அவருடைய தாழ்மை. பிரபஞ்சத்தின் ராஜாவாகிய ஆண்டவரே, தம்மைத் தாழ்த்தவும், தம்மை ஒரு பொருட்டாக எண்ணாமல், ஒரு குழந்தையைப்போல சிறிய நபராக இருப்பதற்கும், மனுஷர்களை நேசிக்கவும், இறுதியாக அவர்களை இரட்சிக்கவும் தயங்கவில்லை.

இயேசு சொன்னதைக் கவனி: "நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்." (மத்தேயு 11:29

ஆம், இயேசுவின் இருதயம், அதாவது அவருடைய சாராம்சம் மிகவும் மென்மையானது மற்றும் தாழ்மையுள்ளது. இது கட்டாயப்படுத்தப்பட்ட குணம்  அல்ல, அவர் அந்தக் குணத்தை வெளிப்படுத்த மிகவும் சிரமப்பட வேண்டியதில்லை. இது அவரது மன உறுதி மற்றும் முயற்சியின் மூலம் வளர்த்துக்கொள்ள முயன்ற ஒரு குணாதிசயம் அல்ல. மாறாக, இது அவரது அன்பான இருதயத்தின் சத்தமாக இருக்கிறது.

இயேசுவே மனத்தாழ்மைக்கான நமது முன்மாதிரியாவார். அவருடைய தாழ்மை எப்போதும் என் இருதயத்தை மிகவும் ஆழமாகத் தொடுகிறது.

அன்பரே, நீ இயேசுவைப்போல் நடக்கவும், அவரைப்போல் பேசவும், அவரைப்போல் நேசிக்கவும், அவருடைய தாழ்மை குணத்தைப் பற்றி தியானிப்பதற்கும், அதைப் பின்பற்றவும், ஒவ்வொரு நாளும் அவரைப் போலவே இருக்கவும் நான் உனக்கு அழைப்பு விடுக்கிறேன்.

வேதாகமம் சொல்வதை மறந்துவிடாதே... "மேன்மைக்கு முன்னானது தாழ்மை."  (நீதிமொழிகள் 18:12)

Eric Célérier
எழுத்தாளர்